S.J.Suryah - இது என்ன சத்திரமா? நினைச்ச நேரத்துக்கு வர.எஸ்.ஜே.சூர்யாவை வெளியில் நிறுத்தி கதவை சாத்திய காதலி.?
சென்னை: SJ Suryah(ஏஸ்.ஜே. சூர்யா) எஸ்.ஜே.சூர்யா தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி குறித்து ஒரு பேட்டியில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.
வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவருக்கு வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. எனவே இயக்குநராகி இரண்டு படங்கள் ஹிட்டடித்துவிட்டால் நாமும் ஹீரோவாகிவிடலாம் என்ற திட்டத்தோடு வாலி படத்தை இயக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து அவர் இயக்கிய குஷி திரைப்படமும் மெகா ஹிட்டானது.

பரிசோதனை முயற்சி: முதல் இரண்டு படங்கள் மெகா ஹிட்டானதை அடுத்து நியூ படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் தானே ஹீரோவாகவும் அறிமுகமானார். சிம்ரன் ஜோடியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் அந்தப் படம் உருவாகி சக்கைப்போடு போட்டது. குறிப்பாக யாரும் அந்த சமயத்தில் அந்த மாதிரியான ஒரு சப்ஜெக்ட்டை தொட தயங்குவார்கள். ஆனால் எஸ்.ஜே சூர்யா அந்த ஜானரில் படம் இயக்கி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
ஒதுங்கிய சூர்யா: அடுத்து அவர் இயக்கிய அன்பே ஆருயிரே படமும் வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும் படத்துக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. தொட்ர்ந்து சில வருடங்கள் காணாமல் போயிருந்த அவர் இசை படத்தின் மூலம் இயக்குநராக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தை தனது வித்தியாசமான திரைக்கதையில் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா. படம் முழுவதும் கதையை நகர்த்தி சென்றுவிட்டு க்ளைமேக்ஸில் ஒட்டுமொத்தமாகவே இது ஒரு கனவு என்று அவர் சொன்னதற்கு மிகப்பெரிய தைரியம் இருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் சிலாகித்தனர்.
நடிப்பு அரக்கன்: இசை படத்துக்கு வசூல் ரீதியாக போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் நடித்து தனது திறமையை நிரூபித்தார். அவரது நடிப்பை பார்த்த பலரும் மூக்கின் மேல் விரலை வைத்து எஸ்.ஜே.சூர்யா இவ்வளவு பெரிய நடிகனா என வாய் பிளந்தனர். அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ரசிகர்களும் அவரை நடிப்பு அரக்கன் என்று புகழ்கின்றனர
நோ திருமணம்: 55 வயதான எஸ்.ஜே.சூர்யா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் அதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனக்கு ஒரு காதல் தோல்வி நடந்தது. அந்தக் காதல் நான் இயக்கிய அன்பே ஆருயிரே படத்தை போன்றேதான் இருக்கும். இரண்டு பேருமே உண்மையாகத்தான் காதலித்து வந்தோம்.
இரவு விருந்து: ஒருமுறை எனது காதலி இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து என்னை அழைத்திருந்தார். அந்த சமயம் பார்த்து ஒரு தயாரிப்பாளரோ படத்தை பற்றி பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார். நானும் எதையும் யோசிக்காமல் தயாரிப்பாளரை பார்ப்பதற்கு சென்றுவிட்டேன். ஆனால் அந்த மீட்டிங் இரவு 12 மணிவரை சென்றது. அந்த சந்திப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக காதலியின் வீட்டுக்கு சென்றேன்.
இது சத்திரம் இல்லை: ஆனால் காதலியோ உச்சக்கட்ட கோபத்தில் இருதார். என்னை பார்த்தவுடன், "இது ஒன்றும் சத்திரம் இல்லை. நினைத்த நேரத்துக்கு வருவதற்கு என முகத்துக்கு நேராகவே சொல்லி கதவை ஓங்கி சாத்திக்கொண்டார். அது எனக்கு ரொம்பவே கஷ்டத்தை கொடுத்தது. முக்கியமாக அந்த காதல் முறிந்துவிட்டது. அது ஏற்படுத்திய தாக்கம் பெரியதாகவே இருந்தது. அந்த காதல் முறிவுக்கு பிறகு திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











