S.J.Suryah - அந்த இடுப்பு சீனை எடுக்க எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா?.. குஷி சீக்ரெட் சொன்ன எஸ்.ஜே.சூர்யா
சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) குஷி படத்தில் வரும் ஜோதிகாவின் இடுப்பு சீன் எடுக்கப்பட்டது குறித்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
வாலி படத்தின் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி படத்தை இயக்குபவர் அவர். தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலகட்டத்திலேயே நியூ படத்தை சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் எடுத்து அட்டகாசம் செய்தார். அதன் காரணமாக அப்போதே கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார் எஸ்.ஜே.சூர்யா.

குஷி சூர்யா: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். எந்த ஒரு இயக்குநரும் படத்தின் டைட்டில் கார்டிலேயே கதையை சொல்ல அச்சப்படுவார்கள். ஆனால் எஸ்.ஜே.சூர்யாவோ குஷி படத்தின் டைட்டில் கார்டிலேயே, 'இவர்கள் இரண்டு பேரும் சேரப்போகிறார்கள் . எப்படி சேரப்போகிறார்கள் என்பதைதான் இதில் பார்க்கப்போகிறோம்' என கூறித்தான் படத்தையே ஆரம்பித்தார்.
மெகா ஹிட்: குஷி படம் வழக்கமான காதல் கதைதான். இயக்குநர் விக்ரமனேக்கூட விஜய்யிடம் குஷியில் என்ன இருந்தது என்று அந்தப் படத்தை ஒத்துக்கொண்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். வழக்கமான காதல் கதைதான் என்றாலும் குஷி படம் மெகா ஹிட்டானதற்கு ஒரே காரணம் எஸ்.ஜே.சூர்யா மட்டும்தான். அவர் தன்னுடைய மேக்கிங்கிலும், ஸ்க்ரீன் ப்ளேவிலும் படத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.
ஃபேவரைட் சீன்: எஸ்.ஜே.சூர்யா எப்போது சீன் பிடிப்பதில் கில்லாடி என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்லியதுண்டு. குஷி படத்திலும் ஏகப்பட்ட அமர்க்களமான காட்சிகள் இருக்கும். அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்ட சீன் என்றால் மொட்டை மாடியில் விஜய்யும், ஜோதிகாவும் புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்போது ஜோவின் இடுப்பை விஜய் பார்ப்பதுதான். அந்த சீனை அவ்வளவு அழகாக பில்ட் அப் செய்து உரையாடலை நீள செய்து இடைவேளை விட்டிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. இன்றுவரை பலரது ஃபேவரைட் சீன் அது.

எப்படி எடுத்தார் தெரியுமா?: இந்நிலையில் அந்த சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் அளித்த பேட்டியில், "குஷி படத்தில் அந்த இடுப்பு சீனை எடுப்பதற்காக மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டேன். விமானம் ஒன்று போக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். என்னடா இவன் க்ளோஸ் அப் ஷாட் எடுக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்கிறானே என திட்டினார்கள். ஆனால் நான் நினைத்தபடிதான் அதை எடுத்தேன். அந்தப் பொறுமையும், உழைப்பும்தான் இன்றுவரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது" என்றார்.
நடிகராக கலக்கும் சூர்யா: எஸ்.ஜே.சூர்யா கடைசியாக இசை படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்கவில்லை. அதேசமயம் நடிகராக கலக்கிவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக பொம்மை படம் வந்தது. தொடர்ந்து இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











