HBD எஸ்.ஜே.சூர்யா.. அவர் தமிழ் சினிமாவுக்கு ஏன் அவசியமான இயக்குநர்?.. அவரிடம் என்ன ஸ்பெஷல்?

சென்னை: எஸ்.ஜே.சூர்யாவை இப்போதைய 2கே கிட்ஸுக்கு நடிகராகத்தன் பெரும்பாலும் தெரியும். ஆனால் அவர் இயக்குநராக பல சம்பவங்களை தரமாக செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்த சூர்யா; இப்போது கில்லர் படத்தின் மூலம் இயக்குநராக மீண்டும் களம் கண்டிருக்கிறார். இன்று அவருக்கு 58அவது பிறந்தநாள்.

நடிகராக வேண்டுமென்ற கனவோடுதான் தென்காசி மாவட்டத்தில் இருக்கும் வாசுதேவநல்லூர் என்ற ஊரிலிருந்து சென்னைக்கு வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் அவருக்கு இயக்குநராகும் கதவு திறந்தது. வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். அந்தப் படம் அஜித் மற்றும் சூர்யாவுக்கு அவர்களது கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது என்பது குறிபிடத்தக்காது.

செம தைரியம்: பொதுவாக முதல் படம் எடுக்கும் பெரும்பாலானவர்கள் எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் வென்றுவிட வேண்டுமென்றுதான் படம் எடுப்பார்கள். ஆனால் சிலர்தான் சென்சிட்டிவ்வான கதைகளை வைத்து சற்றும் தடுமாறாமல் ரசிகர்களுக்கு கொடுப்பார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் எஸ்.ஜே.சூர்யா. வாலி படத்தின் ஒன் லைனே, தம்பியின் மனைவியை அண்ணன் அடைய நினைப்பதுதான். கொஞ்சம் பிசகினாலுஜ்ம் அந்தப் படம் வேறு மாதிரியான கலருக்குள் சென்றிருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் சூர்யா கனகச்சிதமாக எடுத்து படத்தை ஹிட்டாக்கிவிட்டார்.

குஷியிலும் தைரியம்: வாலியில்தான் அப்படி என்றால் குஷியில் அதைவிட ஒரு படி மேலே சென்றிருப்பார். படத்தின் டைட்டில் கார்டிலேயே எந்த இயக்குநரும், படத்தின் கதை இதுதான் என சொல்லமாட்டார். ஆனால் கதை மீதும், திரைக்கதை மீதும் அபார நம்பிக்கை கொண்ட இயக்குநர் மட்டுமே அப்படிப்பட்ட செயலை செய்வார். எஸ்.ஜே. சூர்யா செய்தார். டைட்டில் கார்டிலேயே கதை சொன்ன பாணியை அதற்கு பிறகும் யாரும் பெரிதாக பின்பற்றவில்லை.

S J Surya s birthday is today why he is important to Tamil cinema
Photo Credit:

முன்னரே செய்துவிட்டார்: அதேபோல் நியூ படம் வெளியான சமயத்தில் எல்லாம் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளர்ச்சியடைந்திருக்கவில்லை. ஆனால் சூர்யாவோ அப்போதைய தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு நியூ படத்தை தரமான சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்படி பல விஷயங்களை அவர் தைரியமாக அட்டெம்ப்ட் செய்ததால்தான் இத்தனை வருடங்கள் நிலைத்து நிற்க முடிந்திருக்கிறது.

உச்சக்கட்ட ட்விஸ்ட்: ஒரு படத்தில் ட்விஸ்ட் இருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் ஒரு படமே ட்விஸ்ட்டாக இருந்தல்?; எஸ்.ஜே. சூர்யா இசை படத்தில் அதனையும் செய்தார். கிட்டத்தட்டன் மூன்று மணி நேரம் ஓடிய படத்தில் 99 சதவீதம் கனவுதான் என்ற ட்விஸ்ட்டை படத்தின் க்ளைமேக்ஸில் வைத்து அப்ளாஸை அள்ளினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக் அந்தப் படம் அப்போதைக்கு சரியாக போகவில்லை. ஆனால் இப்போதோ கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பல ஸ்பெஷல்களை கொண்டிருப்பவர் எஸ்.ஜே.சூர்யா.

ஏன் அவசியம்?: கடந்த சில வருடங்களாகவே இயக்கத்திலிருந்து ஒதுங்கிய அவர்; இப்போது கில்லர் படத்தை இயக்கவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் சூர்யாவின் வித்தியாச அட்டெம்ப்ட்டுகளில் ஒன்றாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இப்போதைய தமிழ் சினிமா வித்தியாச கதைக்களங்கள், மேக்கிங், கதை சொல்லல் பாணியிலிருந்து விலகிவிட்டதாகவே ரசிகர்கள் பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.

அந்தக் கருத்தையும், நிலைமையையும் சுக்குநூறாக உடைப்பதற்கு வித்தியாசமான முயற்சிகளையும் தைரியமாக மேற்கொள்ளும் இயக்குநர் மீண்டும் வர வேண்டும். பார்த்திபன் வித்தியாசமாக எடுத்தாலும் அவரால் வணிக ரீதியான ஒரு வெற்றியை தர முடியவில்லை. ஆனால் சூர்யாவோ வித்தியாசமான மேக்கிங், கதை சொல்ல பாணி என அத்தனையையும் செய்து வணிக ரீதியாக வெற்றியை கொடுத்திருக்கிறார்.

Take a Poll

அப்படிப்பட்ட சூர்யா தமிழ் சினிமாவில் அவசியம் இயக்குநராக தொடர வேண்டும். அவர் அப்படி தொடர்ந்தால்தான் அடுத்து வருபவர்கள் தைரியமாக தங்களது மேக்கிங் உள்ளிட்டவைகளை வித்தியாசத்துடன் அணுகுவதற்கு ஏதுவாக இருக்கும். கில்லர் திரைப்படம் அதனை செய்யும் என்ற நம்பிக்கை கொள்ளலாம். பிறந்தநாள் வாழ்த்துகள் எஸ்.ஜே.சூர்யா..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X