பாடகி ஜானகி வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு

By Siva

மைசூர்: உறவினர் வீட்டிற்கு சென்ற இடத்தில் வழுக்கி விழுந்ததில் பாடகி எஸ். ஜானகியின் இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்ற இடத்தில் வழுக்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

S. Janaki falls and fractures her hip

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் இடுப்பு எலும்பு முறிந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது குறித்து ஜானகிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் நிதின் கூறியதாவது,

அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு 81 வயதாகிறது. இந்த வயதில் இது சகஜம் தான். அவர் 3 வாரங்களில் குணமாகி நன்றாக நடக்க ஆரம்பித்துவிடுவார். தற்போதைக்கு அவருக்கு ஓய்வு தேவை என்றார்.

அறுவை சிகிச்சை முடிந்து ஜானகி நேற்று வீடு திரும்பினார். அவர் உடல் நலம் சரியாகும் வரை மைசூரில் தங்க உள்ளார். ரசிகர்களின் பிராத்தனையால் நான் சீக்கிரம் குணமடைவேன் என்று ஜானகி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X