S Janaki: நான் போன பின்னும் நீ வாழ வேண்டும்னும் பாடிய ஜானகி அம்மாவின் உடல்.. இறுதி அஞ்சலி எங்கு தெரியுமா?
சென்னை: இந்திய திரை உலகில் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடிய மிக மூத்த பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் ஜூலை 11ஆம் தேதி காலமானார் என்ற தகவல் இந்தியத் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 88. அவரது உடல் மைசூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை அளித்த தகவலின் படி, ஜூலை 11ஆம் தேதி மதியம் 12.49 மணி அளவில் மிகவும் மோசமான உடல்நிலையில் பாடகி ஜானகி அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இருந்த நிலையைப் பார்த்ததும், அவரை உடனே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் பார்த்து வந்தோம்.

ஜானகி அம்மாவின் கடைசி நிமிடங்கள்: அடுத்தடுத்த சிகிச்சைகள் முறையாக அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவருக்கு மருத்துவக் குழுவினர் சி.பி.ஆர் சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த சிகிச்சைக்கு மத்தியிலேயே ஜானகி அம்மாள் அடுத்தடுத்த மாரடைப்புகளை எதிர் கொண்டார். ஆனாலும் மருத்துவர்கள் போராடிப் பார்த்தனர். இறுதியாக மாலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் அஞ்சலி: அவரது மறைவுக்கு திரை உலகத்தினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது உடல் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக திரை உலகைச் சார்ந்த பிரபலங்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இணையத்தில் அவரது உடலைப் பார்த்த ரசிகர்கள் பலருமே தங்களது ஆதங்கத்தையும் கண்ணீரையும் பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications