Vijay Antony: S.K 25 Vs V.A 25.. பராசக்தி டைட்டில் விவகாரம்.. விஜய் ஆண்டனியை தப்பா நெனச்சுட்டாங்களே!

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் அடிபடும் பெயர்கள் விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் பெயர்கள் தான். காரணம், இன்றைக்கு விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் டைட்டிலும், சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு படங்களின் பெயர்களும் ஒரே பெயராக இருந்ததால், பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

விஜய் ஆண்டனி தனது 25வது படத்தினை தானே தயாரித்து, இசை அமைத்து நடிக்கவும் செய்கின்றார். இந்தப் படத்தினை அருண் பிரபு இயக்குகின்றார். இந்தப் படத்திற்கு இரண்டு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழில் இந்தப் படத்திற்கு சக்தித் திருமகன் எனவும் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்தில் படத்தின் பெயர் பராசக்தி எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதும், பலரும் கூறியது, சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் டைட்டிலை, முன்கூட்டியே தெரிந்து கொண்டு விஜய் ஆண்டனி இவ்வாறு செய்துள்ளார் எனப் பேசினர்.

parashakthi vijay antony sivakarthikeyan

சிவகார்த்திகேயன் 25: இப்படியான நிலையில், மாலை வெளியிடப்பட்ட சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் டைட்டில் ஏற்கனவே உலா வந்த தகவலின் படி, பராசக்தி என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தப் படத்தின் டைட்டில், சிவாஜி தமிழ் சினிமாவில் அறிமுகமான படமான பராசக்தி படத்தின் டைட்டில் தான். மேலும் இந்தப் படத்தின் டைட்டிலை ஏ.வி.எம் நிறுவனத்திடம் உரிய முறையில் பெற்றும், சிவாஜி குடும்பத்தினர் மற்றும் கலைஞர் குடும்பத்தினரிடமும் பேசி அனுமதி வாங்கி பராசக்தி என்ற டைட்டிலை படக்குழு வைத்துள்ளது.

parashakthi vijay antony sivakarthikeyan

விஜய் ஆண்டனி 25: சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்திற்கு முதலில் புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டது. அதன் பின்னர்தான் பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், விஜய் ஆண்டனி மீதுதான் பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அதுவும் குறிப்பாக தமிழில் சக்தித் திருமகன் என டைட்டிலை வைத்த விஜய் ஆண்டனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திக்கு மட்டும் பராசக்தி என டைட்டில் வைக்க என்ன காரணம் என்ன? விஜய் ஆண்டனி வேண்டும் என்றே இவ்வாறு செய்கின்றார். மேலும் சிவகர்த்திகேயன் மற்றும் அவரது படக்குழிவனரிடம் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தத்தான் இவ்வாறு செய்துள்ளார் என கூறப்பட்டது.

parashakthi vijay antony sivakarthikeyan

உண்மை: இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப்பக்கத்தில் தான் ஏற்கனவே தெலுங்கில் பராசக்தி என்ற பெயரை, தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்து வைத்துள்ளார். அதுவும் அந்தப் பெயரினை தெலுங்கு பதிப்பிற்காக பதிவு செய்துள்ளார். இந்த பெயரினை கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி பதிவு செய்துள்ளார். அது தொடர்பான ஆவணத்தினையும் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள், விஜய் ஆண்டனி தரப்பில் தவறு எதுவும் இல்லை. அவரது செயல் முறையாகத்தான் உள்ளது. அவரைப் போய் தவறாக நினைத்து விட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

parashakthi vijay antony sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X