இளையராஜா இசையில் எஸ்பிபி பாடப் போகிறார்... மீண்டும் பொழியப் போகிறது இளைய நிலா..!

இளையராஜா இசையில் எஸ்.பி.பி மீண்டும் பாட இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

Recommended Video

இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாட இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது- வீடியோ

சென்னை: பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பின்னர் மீண்டும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாட இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடிய பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம். காலத்தால் அழியாத அப்பாடல்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே காப்புரிமை பிரச்சினை ஏற்பட்டது அனைவரும் அறிந்தது தான்.

கடந்த 2017ம் ஆண்டு இந்த பிரச்சினை பூதாகரமானது. சினிமாவில் 50 ஆண்டுகள் பூர்த்தியானதை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் பயணித்து, பல இடங்களில் இசைக் கச்சேரிகள் நடத்தினார் எஸ்.பி.பி. அப்போது இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் சிலவற்றை அதில் பாடினார்.

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ்:

எஸ்.பி.பிக்கு நோட்டீஸ்:

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

அதிரடி அறிவிப்பு:

அதிரடி அறிவிப்பு:

இதையடுத்து, ‘இனி இளையராஜா பாடல்களை தான் மேடையில் பாடப் போவதில்லை' என அறிவித்தார் எஸ்.பி.பி. பின்னர், இந்தப் பிரச்சினை மீதான பல்வேறு வாதங்களுக்குப் பிறது, ‘என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் பரவாயில்லை நான் இளையராஜா பாடல்களை மேடையில் பாடுவேன்' என அதிரடியாக அறிவித்தார் அவர்.

ரசிகர்கள் கவலை:

ரசிகர்கள் கவலை:

இப்பிரச்சினையால் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி. ரசிகர்கள் பெரிதும் கவலையடைந்தனர். இனி, இளையராஜா இசையில் எஸ்.பி.பி பாடல்களை ஒரே மேடையில் கேட்க இயலுமா என்ற வருத்தம் அவர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் அவர்களது கவலைக்கு மருந்தாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இளையராஜா பிறந்தநாள் விழா:

இளையராஜா பிறந்தநாள் விழா:

அதாவது, அடுத்த மாதம் 2ம் தேதி தன்னுடைய பிறந்தநாளையொட்டி, இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்த இருக்கிறார் இளையராஜா. சென்னை - செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில், எஸ்.பி.பி., கே.ஜே. யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ ஆகிய பாடகர்கள் பாட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலால் இசை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X