பாடு நிலா பாலுன்னா சும்மாவா.. நிலாவை வச்சு 300 பாட்டு பாடுவேன்.. வாட்ஸப்பில் வைரலாகும் வீடியோ!
சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
Recommended Video
எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என ஏகப்பட்ட ரசிகர்கள், பிரபலங்கள் சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்த சீரியல் வீடியோ ஒன்று வாட்ஸப்பில் படு வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பு
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக இன்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

பிரபலங்கள் பிரார்த்தனை
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடலை கேட்காத ஆளே இந்தியாவில் இருக்க முடியாது என்றே சொல்லலாம். 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரலுக்கு மயங்கிய ரசிகர்களும் பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ஹாரிஷ் ஜெயராஜ் வீடியோ
நேற்று இளையராஜா, "எழுந்து வா பாலு" என உருக்கமாக பேசி வீடியோ போட்டிருந்த நிலையில், தற்போது, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தனது பிரார்த்தனைகளை தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸப் வைரல்
இதனிடையே, ஜன்னல் - அடுத்த வீட்டு கவிதை எனும் சன் டிவியின் எவர்க்ரீன் தொடரில் இருந்து, எஸ்.பி. பாலசுப்ரமணியம் நிலாவை பற்றி 200, 300 பாடலை தான் பாடுவேன் எனக் கூறி, ஸ்ருதி ஏற்றிக் கொண்டே "ஆயிரம் நிலவே வா" முதல் ஏகப்பட்ட நிலா பாடல்களை பாடி அசத்தும் வீடியோ ஒன்றை ரசிகர்கள் வாட்ஸப்பில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

பாடு நிலா பாலுன்னா சும்மாவா
கே. பாலசந்தரின் அந்த சீரியலில் மது அருந்திக் கொண்டே எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடிகை லட்சுமி உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடத்தும் இசை கச்சேரி, இப்போ பார்க்கும் ரசிகர்களையும் அட போட வைக்கிறது. நிலவை பற்றிய பாடல்களை சும்மா பாடாமல், ஒவ்வொரு பாட்டுக்கும் தொடர்பு படுத்தி, தனித் தனி மாடுலேஷன் கொடுத்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது முத்திரையும் பதிப்பது செம சிறப்பு.


Click it and Unblock the Notifications











