எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது.. மற்றொரு அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!

சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மற்றொரு அறிக்கை வெளியாகி உள்ளது.

Recommended Video

SPB குறித்த இளையராஜாவின் வீடியோ கண்ணீரை வரவழைத்துவிட்டது.. பிரபலங்கள் உருக்கம்

கடந்த வாரம் கொரோனா தொற்று தனக்கு பரவி இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இந்நிலையில், நேற்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.

S.P. Balasubhramanyam remains stable – Doctors announced!

அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தனுஷ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய ரசிகர்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், பயப்பட தேவையில்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் நேற்று அறிவித்து இருந்தார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைத் தொடர்ந்து அவரது மனைவி சாவித்ரிக்கும் கொரோனா தொற்று பரவியது.

இந்நிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது மற்றொரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அதில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து சீராகவே உள்ளது. செயற்கை சுவாச கருவிகளின் உதவியோடு, குணமாகி வருகிறார். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, எத்தனையோ மக்களின் சோகத்தை போக்கிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராகி வரும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் குணமடையும் வரை தங்களின் பிரார்த்தனை தொடரும் என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X