பாடகர் எஸ்.பி.பி.யின் தாய் மரணம்: திரையுலகினர் அஞ்சலி
Recommended Video

பாடகர் எஸ்.பி.பி.யின் தாய் மரணம்- வீடியோ
நெல்லூர்: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாயார் சகுந்தலா இன்று காலமானார்.
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் தாய் சகுந்தலா(89). அவர் தனது மகள் எஸ்.பி. ஷைலஜாவுடன் ஆந்திர மாநிலம் நெல்லூரில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். இசை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லூரில் வைக்கப்பட்டுள்ள சகுந்தலாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சகுந்தலாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications