மருத்துவமனையில்.. தனது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரபல பாடகர் எஸ்.பி.பி!

By

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

Recommended Video

ஆண் குயில் எஸ்பிபி.. இசைத்துறைக்குள் வந்தது எப்படி? சுவாரசிய தகவல்கள்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஐ.சி.யு.,வில், தன் மனைவியுடன், 'கேக்' வெட்டி, திருமண நாளை கொண்டாடினர்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதை உணர்ந்தார்.

தீவிரச் சிகிச்சை

தீவிரச் சிகிச்சை

இதைடுத்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கடந்த 30 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் உடல் நலம்பெற, திரையுலகம் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

வீட்டில் இருந்தபடி எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தனர். சமூக வலைதளங்களிலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் கவலைக்கிடமாக இருந்த அவர் உடல் நிலையில், இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

51 வது திருமண நாள்

51 வது திருமண நாள்

அவர் உடல் நிலை குறித்து அவர் மகன் எஸ்.பி.பி.சரண் தினமும் தகவல் தெரிவித்து வருகிறார். தனது தந்தை உடல் நிலை குறித்து நல்ல தகவல் வரும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் - சாவித்திரி தம்பதிக்கு நேற்று, 51 வது திருமண நாள். இதையொட்டி, கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

திடீர் கொண்டாட்டம்

திடீர் கொண்டாட்டம்

இதற்காக, பிரத்யேகமாக சிறிய கேக் ஒன்று வாங்கி வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது. நேற்று எஸ்.பி.பி மனைவி சாவித்திரி மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்தார். அப்போது திருமண நாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த திடீர் கொண்டாட்டம், மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இத்தகவல் இணையதளங்களில் வெளியாகி எஸ்.பி.பி. ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரியும் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X