பாட்டு, நடிப்பு, தயாரிப்பு, இப்போ டைரக்டர்... வெப்சீரிஸை இயக்குகிறார் எஸ்.பி.பி.சரண்
சென்னை: பிரபல பாடகரும் நடிகருமான எஸ்.பி.பி.சரண், இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண். இவர் தமிழில் ஏராளமான படங்களில் பின்னணி பாடியுள்ளார்.
ஆடுகளம் படத்தில், ஐயையோ நெஞ்சு..., அலைபாயுதே படத்தில், காதல் சடுகுடுகுடு உட்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

நடிகராக
உன்னைச் சரணடைந்தேன், சரோஜா, துரோகி, வா, வானவராயன் வல்லவராயன், விழித்திரு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆரண்ய காண்டம்
இவர் தனது கேபிட்டல் பிலிம்ஸ் சார்பில், உன்னைச் சரணடைந்தேன், மழை, சென்னை 28, நாணயம், ஆரண்ய காண்டம், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும், திருடன் போலீஸ் உட்பட சில படங்களைத் தயாரித்தார்.

இயக்குனர்
இந்நிலையில், இவர் இயக்குனராக மாறியுள்ளார். இவர், அதிகாரம் என்ற வெப் சீரிஸை இயக்குகிறார். இதை இவரே தயாரிக்கவும் செய்கிறார்.

த்ரில்லர் கதை
கேபிள் சங்கர், ஸ்கிரிப்ட் எழுதுகிறார். 10 எபிசோட் கொண்ட இந்த தொடர், த்ரில்லர் கதையை கொண்டது. தினா தேவராஜன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











