தலைவா இப்பிறவிக்கு இது போதும்.. நெகிழ்ச்சியில் தயாரிப்பாளர்!
சென்னை: நீண்ட நாள் எதிர்பார்ப்பின் பலனாக ரசிகர்களுக்கு அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை நேற்று உறுதி செய்தார் ரஜினிகாந்த்.
ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும் தேதியை டிசம்பர் 31 அன்று அறிவிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நேற்று பதிவிட்டு இருந்தார்.
அது குறித்து டகால்ட்டி படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தலைவரின் தீவிர ரசிகர்
டகால்ட்டி படத்தின் தயாரிப்பாளரான S.P. சவுதாரி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் முடிவை பற்றி அவரின் கருத்தை பதிவிட்டு இருந்தார். "தலைவா இப்பிறவிக்கு இது போதும்" என அவர் கூறியிருப்பதிலேயே S.P. சவுதாரி தலைவரின் தீவிர ரசிகராக இருப்பார் என தெரிகிறது.

தலைவருக்கு வரவேற்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவரை வரவேற்கும் வகையில் ட்வீட்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் உறுதி
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தால் சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்ததாகவும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

ரஜினிகாந்த் நம்பிக்கை
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றியாகும் எனவும் 2021ல் தேர்தலில் வெற்றி பெற்று மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என நம்பிக்கையளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











