குரு பெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா சொல்லனும் முருகா: என்.ஜி.கே பற்றி தயாரிப்பாளர்
அக்டோபரில் என்.ஜி.கே அப்டேட் நிச்சயம் உண்டு என எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
சென்னை: குருபெயர்ச்சிக்கு பிறகு நல்ல செய்தி வரனும் என தாயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் அடுத்து வரக்கூடிய படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்பதால் சூர்யா ரசிகர்கள் அப்டேட் வேண்டுமென்று செல்வாவின் ட்விட்டரை துளைத்து எடுக்கின்றனர்.

அரசியல் த்ரில்லர் படமாக தயாராகி வரும் இப்படத்தின் 60சதவிகித பணிகள் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. செல்வராகவனும் படம் பற்றிய ட்வீட் தவிற மற்ற ட்வீட்களை போட்டுக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பெரிதாக எதுவும் சொல்வதற்கு இல்லாமலே, செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. அக்டோபரில் நிச்சயமாக சில முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என உறுதியளிக்கிறோம். "குரு பெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாம் குணமா வாயால சொல்லனும் முருகா" என ட்வீட் செய்துள்ளார்.
இவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது இம்மாதம், ட்ரெய்லர், ஆடியோ ரிலீஸ் போன்ற விஷயங்கள் நடக்கலாம் எனத் தெரிகிறது. செல்வா யுவன் மேஜிக்கல் கூட்டணியின் பாடல்களை கேட்க எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களை அட்லீஸ்ட் ஒரு பாடல் வெளியிட்டாவது திருப்திபடுத்தலாம் எனத் தெரிகிறது.
இப்படத்தில் ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி, பாலா சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications