சமூகவலைத்தள சர்ச்சை மன்னர் எஸ் வீ சேகருக்கு 40வது திருமண நாள் வாழ்த்துக்கள்

சென்னை: சமூக வலைத்தள பக்கங்களில் சர்ச்சைக்குரிய பதிவினைப் போட்டு பிரபலமான எஸ்வி சேகர் தனது 40வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். எஸ். வி. சேகரின் மனைவி உமா, புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக இருந்த ஜி. ராமநாதன் அவர்களின் மகளாவார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின் என்ற மகனும், அனுராதா எனும் மகளும் உள்ளனர். அவர் தனது 40 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், சகல சௌபாக்கியத்தோடும் வாழ பிலிமிபீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

தஞ்சையில் ஐயர் குடும்பத்தில் 1950 ம் ஆண்டு பிறந்து டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து பின்னர் ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதனத்திற்கான டிப்ளமோ படிப்பை முடித்தவர் மேடை நாடக நடிகராக அறிமுகமானவர் எஸ்.வீ. சேகர். படிக்கும் போதோ நாடக ஆர்வம் அதிகம் இருந்தது.

S Ve shekhar celebrates 40th wedding anniversary

எஸ்.வீ . சேகர். நாடகப்ரியா எனும் நாடக குழுவை 1974ல் தொடங்கினர். உலகளவில் தன் குழுவுடன் இணைந்து பல நாடகங்களை
வெற்றிகரமாக நடத்தியுள்ளார். கோபு - பாபு, கிரேசி மோகன், கிருஷ்ணகுமார் போன்ற பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
நாடக சபாக்கள் இவருக்கு நாடகரத்னா, காமெடி கிங், சிரிப்பலை சிற்பி போன்ற பல பட்டங்களை வழங்கியுள்ளனர்.

வறுமையின் நிறம் சிவப்பு, சிதம்பர ரகசியம் பூவே பூச்சூடவா, ஜீன்ஸ், சகாதேவன் மகாதேவன், போன்ற பல திரைபடங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அரசியலில் கால்பதித்த அவர் 2006 ஆம் ஆண்டு மைலாப்பூர் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சில காலம் அமைதியாக இருந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அங்கிருந்து விலகி பின்னர் பாஜகவில் இணைந்தார்.


சமூக வலைத்தளங்களிலும் திரைதுறையிலும், அரசியல் வாழ்க்கையிலும் மற்றும் பொது வாழ்விலும் அவர் பல இடையூறுகளை சந்தித்தே
வாழ்ந்தவர். சமீபத்தில் அவர் சமூக வலைத்தளங்களில் அவரின் பதிவுகள் மூலம் மிகவும் பிரபலமானவர். அதன் மூலம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
தற்சமயம் அவர் பிக்பாஸ் மதுமிதாவின் தற்கொலை முயற்சி பற்றி கூட பதிவிட்டிருந்தார்.

எஸ். வி. சேகரின் மனைவி உமா, புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக இருந்த ஜி. ராமநாதன் அவர்களின் மகளாவார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின் என்ற மகனும், அனுராதா எனும் மகளும் உள்ளனர். அவர் தனது 40 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வின் என்ற மகனும், அனுராதா எனும் மகளும் உள்ளனர். அவர் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், சகல சௌபாக்கியத்தோடும் வாழ பிலிமிபீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X