சிவகுமாரை விளாசிய எஸ்.வி. சேகர்: சூர்யா மீதான கடுப்பா 'ஓய்'ன்னு விளாசிய நெட்டிசன்ஸ்

By Siva

சென்னை: நடிகர் சிவகுமாரை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார் எஸ்.வி. சேகர்.

77 வயதாகும் சிவகுமார் இன்னும் இளமையாகவே உள்ளார். யோகா, தியானம் செய்யத் தவறாதவர் அவர். யோகா செய்யுமாறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் காபி, டீ குடிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

சிவகுமார்

காபி, டீ குடிக்க வேண்டாம் என்று சிவகுமார் அறிவுரை வழங்கியது தொடர்பான செய்தியை பார்த்த எஸ்.வி. சேகர் அவரை விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார். 'ஆனா என் குழந்தைகள் காப்பி விளம்பரம் நடிக்கலாம்' என்று சிவகுமார் பற்றி ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி. சேகர்.

கார்த்தி

கார்த்தி

காபி, டீ குடிக்க வேண்டாம் என்று பள்ளி, கல்லூரி மாணவர்களை வலியுறுத்தி வருகிறார் சிவகுமார். ஆனால் அவரின் மகன்களான சூர்யாவும், கார்த்தியும் காபி விளம்பரத்தில் நடித்துள்ளனர். காபி விளம்பரத்தில் சூர்யாவுடன் அவரின் மனைவி ஜோதிகாவும் நடித்திருந்தார். அதை பற்றி தான் எஸ்.வி. சேகர் விமர்சித்துள்ளார்.

எதிர்ப்பும்

சிவகுமாரை விமர்சித்து போட்ட ட்வீட்டுக்காக எஸ்.வி. சேகருக்கு ஆதரவும் கிடைத்துள்ளது, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. செய்தியை முழுமையாக படித்துவிட்டு சிறந்த மனிதரான சிவகுமாரை விமர்சிக்கலாம் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அவசரம் எஸ்.வி. சேகருக்கு எல்லாத்திலேயும் அவசரம் என்று விமர்சித்துள்ளனர்.

நீட்

புதிய கல்வித்திட்டம் நீட்டுக்கு எதிராக பேசிய சூர்யாவுக்கு எதிராக கையில் எடுக்க இதை விட வேறு எதுவும் ஆயுதம் கிடைக்கவில்லை போலும்..அதனால் தான் காபி, டீ விளம்பரத்தில் நடித்ததை தேடிக் கண்டுபிடித்து பேசுகிறார் எஸ்.வி. சேகர் என்று அவரை விளாசியுள்ளனர் நெட்டிசன்கள். சூர்யா மாணவ, மாணவியருக்கு உதவி செய்வது இந்த எஸ்.வி. சேகர் கண்ணுக்கு தெரியவில்லை. கார்த்தி விவசாயிகளை ஊக்குவிப்பதும் அவர் கண்ணில் படவே இல்லை. ஆனால் காபி, டீ விளம்பரம் பற்றி மட்டும் தெரிகிறதோ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவர் செய்யும் நல்லதை பாராட்டாவிட்டாலும், அவர் தொழிலை விமர்சிக்காமல் இருப்பதே நலம் என்று சூர்யா, கார்த்தி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X