சபரிமலை விவகாரம்: கமல் ஹாஸனை கலாய்த்த எஸ்.வி. சேகர்
சென்னை: சபரிமலை கோவில் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என்ற கமல் ஹாஸனை கிண்டல் செய்துள்ளார் நடிகர் எஸ்.வி. சேகர்.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸனிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவரோ, சபரிமலை விவகாரத்தில் தான் கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.
கிண்டல்
கமல் ஹாஸனை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார் நடிகர் எஸ்.வி. சேகர். அவர் ட்விட்டரில் ஸ்மைலீக்கள் போட்டு, தசாவதாரம் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு கமல் ஹாஸனை கிண்டல் செய்துள்ளார். #KamalHaasan #Sabarimala
கற்பனை
கமல் ஹாஸனை கிண்டல் செய்த எஸ்.வி. சேகரை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
நிஜம்
கமல் ஹாஸன் படத்தில் நடிக்கிறார், எஸ்.வி. சேகர் நிஜத்தில் நடிக்கிறார் என்ற கமெண்ட் எழுந்துள்ளது.
விதிவிலக்கா
எஸ்.வி. சேகரின் ட்வீட்டை பார்த்த ஒருவர் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்று கேட்டுள்ளார்.
தசாவதாரம்
ஶ்ரீ கோவிந்தராஜ பெருமாளை இரண்டாம் குலோத்துங்க சோழன் பெயர்த்தெடுத்தபோது ஆவேசமாக எதிர்த்த "ராமானுஜதாஸன்" (தசாவதாரம்)படைத்தவன்,நடித்தவன்,என்ற உணர்வுடன் சொல்லியிருந்தால் சரியான கருத்து வந்திருகும். இப்படி மழுப்பத்தேவையிருக்காது.


Click it and Unblock the Notifications











