எஸ்.வி. சேகர் சொல்வதை பார்த்தால் ரஜினி மோடிக்கா ஓட்டு போடச் சொன்னார்?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போடுமாறு ரஜினி தெரிவித்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி. சேகர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்தார் ரஜினிகாந்த். யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டார் அவர்.
அந்த அறிக்கைக்கு புது அர்த்தம் கண்டுபிடித்துள்ளார் எஸ்.வி. சேகர்.
ரஜினி
சிறப்பான அறிக்கை. மகிழ்ச்சி. காவிரி பிரச்சினையை தீர்த்த மோடி அவர்களுக்கே நம் ஓட்டு என்று ட்வீட் செய்துள்ளார் எஸ்.வி. சேகர். இவர் சொல்வதை பார்த்தால் ரஜினி பாஜகவுக்கு ஆதரவளிக்குமாறு அறிக்கை வெளியிட்டார் என்பது போன்று உள்ளது.
மோடி
காவிரி பிரச்சனையை மோடி தீர்த்தாரா? சொல்லவே இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.
கோபம்
ரஜினியின் அறிக்கையை தவறாக புரிந்து கொண்டு ஏதாவது பேச வேண்டாம் என்று ரஜினி ரசிகர்கள் கோபப்பட்டுள்ளனர்.
சிம்பு
'தமிழ்நாட்டுல தண்ணீர்பிரச்சனையை தீர்ப்பவருக்கு வாக்களிக்கணும்னா ஒரே ஒரு வீடியோ போட்டு மொத்தமா ஒரு சொம்புத்தண்ணில தீர்த்துவச்ச சிம்புவுக்குத் தான் ஓட்டு போடணும்' என்று இப்படி ஒரு கோஷ்டி கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











