'கவின் ஒலிம்பிக் போயிருந்தால் என்ன செய்திருப்பார்'.. எஸ்.வி.சேகர் மரண கலாய்.. சிரிச்சே செத்துட்டேன்!
பிக் பாஸ் கவின் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிட்டுள்ள கிண்டலான டிவீட் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் கவினை செமயாக கலாய்த்து டிவீட் செய்துள்ளார் நடிகர் எஸ்.சேகர்.
பிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளரான கவின் சமூக வலைதளங்களின் செல்லப்பிள்ளை. அவருடைய ஆதரவாளர்களும், எதிர்பபாளர்களும் எப்போதும் மோதிக்கொண்டே இருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறும் வரை இது தொடரும் என்றே தெரிகிறது.
கவினை பற்றி பேசாத ஆட்களே இல்லை எனும் அளவுக்கு ஆகிவிட்டது. தற்போது நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் கவினை கலாய்த்து டிவீட் செய்துள்ளார்.
மரண கலாய்
எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பதிவில், "நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். பயங்கரம்", என கவினை கிண்டலடித்துள்ளார்.
எஸ்.வி.சேகருக்கு பதிலடி
இதை பார்த்த கவின் ஆதரவாளர்கள், "ஏன் சார் உங்களுக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியை யாரும் விட்டுக்கொடுக்கலனு கோபத்துல பிக் பாஸ் பார்த்து கருத்து சொல்ல வந்துடீங்களா?", என எஸ்.வி.சேகரை கலாய்த்துள்ளனர்.

கவினின் தப்புக்கணக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பு கவின் மீது நல்ல இமேஜ் இருந்தது. வேட்டையன் கதாபாத்திரம் ஹிட்டானதால், அது மாதிரியே நடந்து கொண்டால் மக்களுக்கு தன்னை பிடிக்கும் என கணக்கு போட்டார் கவின். அதன்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் கடலைப் போடுவதையே தனது ஸ்டார்டஜியாக்கினார். அதை வெளிப்படையாக சொல்லவும் செய்தார். ஆனால் அதுவே அவருக்கு எதிராக மாறிவிட்டது.

தாய் கைது
கவினை சுற்றி இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அவரது குடும்பமே கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. கவினின் தாய் சீட்டு மோசடி வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ளார். ஆனால் இது எதுவும் தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறார் அவர். இன்னும் இரு தினங்களில் அவர் வெளியே வருகிறாரா? இல்லையா என்பது தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











