எஸ்3 பட ரிலீஸ் தள்ளிப் போனது ஏன்?: சூர்யா விளக்கம்
சென்னை: எஸ் 3 படம் தள்ளிப் போனது குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ் 3 படம் தள்ளித் தள்ளிப் போய் டிசம்பர் 23ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எஸ் 3 படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு வரும் பைரவாவுடன் எஸ் 3 மோதுகிறது.
இது குறித்து சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கட்டுப்படுத்த முடியாத பல வெளிக்காரணங்களால் எஸ்3 படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பெரிய நன்மைக்காக என்று நம்பவும். உங்களின் ஆதரவு தேவை என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications