»   »  எஸ் 3 டீசர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

எஸ் 3 டீசர் ரிலீஸ் எப்போ தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் எஸ் 3 படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த வெளியீடு ஒரு வாரம் தள்ளிப் போய் விட்டது.

வரும் நவம்பர் 7-ம் தேதி இந்த டீசரை வெளியிடப் போவதாக ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருந்தாலும் சூர்யா ரசிகர்களை தீபாவளி திருநாளில் உற்சாகப்படுத்துவதற்காக படத்தின் முதல் தோற்ற படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர்.


S3 teaser release date announced

அத்துடன் ஒரு மோஷன் போஸ்டர் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.


இவற்றில் துரை சிங்கம் சூர்யா, ஸ்ருதிஹாஸன் இடம்பெற்றுள்ளனர்.


சூர்யா மிகவும் எதிர்ப்பார்க்கும் படமான எஸ் 3யில் அவருக்கு இரண்டு ஜோடி. இதற்கு முந்தைய இரு சிங்கங்களிலும் இருந்த அனுஷ்கா ஒரு ஜோடி. இன்னொருவர் ஸ்ருதிஹாஸன்.


ஹரி எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. டிசம்பரில் மெகா வெளியீடாக வருகிறது எஸ் 3.

English summary
Surya's S3 motion poster and first look stills released Today online.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil