எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்காக மாஸ் பிரார்த்தனை.. எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமான வீடியோ!

சென்னை: கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் வந்து மைக்கை பிடித்து பாடுவாரு என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

SPB மீண்டு வர 6 மணிக்கு Pray பண்ணுங்க • Vivekh, SA. Chandrasekhar

நாளை மாலை 6 மணி முதல் 6.05 மணி வரை ஒட்டுமொத்த தமிழக மக்களும், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என வெறும் ஐந்தே ஐந்து நிமிடம் ஒருமித்த குரலாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

SA Chandrasekar asks tamil peoples to do a Mass Prayer for SPB speedy recovery!

இது தொடர்பாக தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில், இருப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், மருத்துவர்களையும் மிஞ்சிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் இறை சக்தி, இறைவன். அவன் மீது நம்பிக்கை இருக்கிறது.

ஆயிரம் நிலவே வா என பாடி திரைத் துறைக்குள் அடியெடுத்து வைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம், சீக்கிரம் குணமாகி மீண்டும் மைக்கை பிடித்து லட்சம் நிலவே வா என பாடுவார் என மிகவும் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

முன்னதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, ஹாரிஷ் ஜெயராஜ், ஜி.வி. பிரகாஷ், தனுஷ் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X