எஸ்.ஏ.சந்திரசேகரின் கேப் மாரிக்கு ஏ சர்டிபிகேட்
சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் கேப் மாரி படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். ஜெய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அதுல்யா ரவி மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளிலும் 70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். இவர் பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார்.

இவர் இயக்கத்தில் 1981ஆம் ஆண்டில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை படமே இவரை சினிமாவின் மிக முக்கிய இயக்குநராக மாற்றியது.
அந்த படத்தை நான்கு மொழிகளில் ரீமேக் செய்தனர். அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதா பச்சன் நடித்து இருப்பார். அதே படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்திருப்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போதே பார்த்துக் கொள்ளுங்கள், அந்த படத்தின் வெற்றியை. கடந்த 2015ஆம் ஆண்டில் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை கடைசியாக இயக்கி இருந்தார். இவர் கடைசியாக ட்ராஃபிக் ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் அனைத்து விதமான விமர்சனங்களையும் ஏற்று கொள்பவர் என்பதோடு, இளைஞர்களை ஊக்குவிக்கும் மனப்பான்மை கொண்டவர். இவர் கொடி படத்தில் தனுஷ் உடன் நடித்திருப்பார். தற்போது கூட ஒத்த செருப்பு படத்தை பார்த்து விட்டு படத்தின் இயக்குநர் பார்த்திபன் வீட்டிற்கு சென்று எஸ்.ஏ.சந்திரசேகர் வாழ்த்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கி உள்ளார். இது அவரது 70வது படமாகும். நடிகர் ஜெய்யின் 25ஆவது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஜெய்க்கு இரண்டு கதாநாயகிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் அதுல்யா ரவி. மற்றொருவர் சக்க போடு போடு ராஜா மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் நடித்த வைபவி.
இவர்களுடன் இப்படத்தில் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின், ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், ஜுங்கா படங்களுக்கு இசையமைத்த சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார்.
படத்திற்க கேப் மாரி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் என் காதல் ராணி எனும் பாடல் எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 50க்கும் மேற்பட்ட அழகிகளை வைத்து வண்ணமயமாக போட்டோ சூட்களும் எடுக்கப்பட்டதென்று தெரிகிறது.
தற்போது படத்தின் மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, படத்திற்கு தணிக்கை குழுவிடம் இருந்து ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











