என் மகன் விஜய்க்கு நான் ஒத்தையடி பாதை போட்டுக் கொடுத்தேன்.. இன்று அவர்.. எஸ்.ஏ. சந்திரசேகர் பளிச்!

சென்னை: மகன் விஜய் பற்றி மீண்டும் சினிமா விழா ஒன்றில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் சமீப காலமாக கருத்து வேற்றுமை காரணமாக பேசிக் கொள்வது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்நிலையில், மகனை தான் சினிமாவில் அறிமுகப்படுத்தியது குறித்தும் தனது மகனின் அசுர வளர்ச்சி குறித்தும் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.

பனிப்போர்

பனிப்போர்

தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் மகன் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பனிப்போர் நிலவி வருகிறது. இருவரும் சந்தித்துக் கொள்வதும் பேசுவதும் இல்லையாம். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை வெளிப்படையாக பல மேடைகளில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் கூறி பரபரப்பை கிளப்பினார்.

விஜய்க்காக மாறினேன்

விஜய்க்காக மாறினேன்

ஆரம்பத்தில் விஜயகாந்த், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களை வைத்து கிரைம் த்ரில்லர் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வந்த நான் என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், அவருக்காக என்னை மாற்றிக் கொண்டு இளைஞர்களை கவரக் கூடிய படங்களை எடுக்க ஆரம்பித்தேன் என நான் கடவுள் இல்லை பட விழாவில் பேசியது பரபரப்பை கிளப்பியது.

களிமண்ணையும் அழகாக

களிமண்ணையும் அழகாக

இந்நிலையில், தற்போது தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் மகன் விஜய் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு சாதாரண களிமண்ணையும் அழகான பானையாக நல்ல படைப்பாளியால் மாற்ற முடியும். உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை என்றார்.

ஒத்தையடி பாதை

ஒத்தையடி பாதை

மேலும், என் மகன் விஜய்க்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதையை தான் போட்டுக் கொடுத்தேன். இன்னைக்கு அவர் எட்டு வழிச்சாலை அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணமும் அவரது உண்மையான உழைப்புதான் என்று பாராட்டி பேசியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் உயர்வுக்கு காரணம்

ரஜினிகாந்த்தின் உயர்வுக்கு காரணம்

நடிகர் ரஜினிகாந்த் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு மொத்தமும் அவருடைய உண்மையான உழைப்பு தான் காரணம். சினிமாவை பொறுத்தவரை உண்மையான உழைப்பை யார் ஒருவர் போடுகிறாரோ அவர் நிச்சயம் ஒரு நாள் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்துக்கு செல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

திடீர் பாராட்டு

திடீர் பாராட்டு

மாநாடு, நான் கடவுள் இல்லை என இரு படங்களின் ரிலீசுக்காகவும் காத்திருக்கும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் திடீரென தனது மகன் விஜய் குறித்து இப்படி பாராட்டி பேசி இருப்பது கோடம்பாக்கத்தில் பெரியளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. அப்பாவுக்கும் மகனுக்கான பிரச்சனைகள் சமாதானம் ஆகி விட்டதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X