twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் முதல் படத்தின்போதும் ‘அந்த’ப் பிரச்சினை இருந்தது: எஸ்.ஏ.சந்திரசேகர் ஓப்பன் டாக்

    விஜயின் முதல் பட ரிலீஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

    |

    Recommended Video

    விஜயின் முதல் படத்தில் அந்த பிரச்சனை பத்தி அவர் அப்பா ஓபன் டாக் - வீடியோ

    சென்னை: விஜயின் முதல்பட ரிலீசின் போது தனக்கும் தியேட்டர் பிரச்சினை இருந்ததாக இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரித்துள்ளார்.

    இந்தியாவின் முதல் கிளாஸ்டோஃபோபிக் வகை படமாக வெளிவரவுள்ள, ஆண்டனி படத்தின் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சி நடிகைகள் ஜெயசித்ரா, ரேகா, தயாரிப்பாளர்கள் தேனப்பன், தங்கதுரை, இயக்குனர்கள் பிரவின்காந்த், யுரேகா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ் சினிமாவில் தற்போது வரும் இளம் இயக்குனர்கள் எந்தவித சமரசமுமின்றி படத்தை எடுப்பதாக பாராட்டினார்.

    இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது,

    மிரட்டல் டிரெய்லர்:

    மிரட்டல் டிரெய்லர்:

    "இளம் இயக்குனர்களை பார்க்கும் போது பயமாக இருக்கிறது. நம்மை மிரட்டி விடுகிறார்கள். இந்த டிரெய்லரை பார்க்கும் போதே மிரட்டலாக இருக்கிறது. கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்திலும் அபார உழைப்பை தருகிறார்கள். ஒரு நிமிடம் 40 வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லரையே மிரட்டி இருக்கிறார்கள். ஒரு படத்திற்கு அதன் மையக்கரு தான் முக்கியம் அது ஆண்டனி படத்தில் இருக்கிறது. இந்த படம் நிச்சியம் வெற்றி பெறும்."

    வாய்ப்புகளைத் தடுக்கக் கூடாது:

    வாய்ப்புகளைத் தடுக்கக் கூடாது:

    நீ எல்லாம் எதுக்கு படம் பண்ணுற என்று அவர்கள் கேட்பது போல் இருக்கிறது. எனக்கு 76 வயது ஆகிறது. என்னை கடந்த 11 மாதங்களாக ஒரு இளைஞர் வேலை வாங்கி வருகிறார். டிராபிக் ராமசாமி படத்தின் இயக்குனர் விக்கி தான் அவர். இந்த படத்துக்காக டூப் போடாமல் அடி, உதை வாங்கி இருக்கிறேன். எதிர்பாத்தது வரும் வரை விடுமாட்டார் அவர். வாய்ப்பு தேடி வரும் இளைஞர்களை தடுக்கக் கூடாது என்பதற்காக எனது அலுவலகத்தில் வாட்ச்மேன் வைத்ததில்லை.

    உழைக்க வேண்டும்:

    உழைக்க வேண்டும்:

    நடிகை ஜெயசித்ரா அவர்கள் தமது மகனின் படம் ரிலீசாவதில் பிரச்சினை இருப்பதாக இங்கு வருத்தப்பட்டார். எனது மகன் விஜய்யின் முதல் படத்தை ரிலீஸ் செய்வதில் கூட எனக்கு பிரச்சினை இருந்தது. சினிமாவில் இது சகஜம் தான். ஆனால் உழைப்பதை நிறுத்தக்கூடாது. சோர்ந்து போகக் கூடாது.

    டெஸ்ட் தான்:

    டெஸ்ட் தான்:

    பலனை எதிர்ப்பார்க்காமல் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்தால், நிச்சயம் ஒரு நாள் வெற்றி தேடி வரும். ஒவ்வொரு தோல்வியும் கடவுள் நமக்கு வைக்கும் டெஸ்ட். தோல்விகள் என்பது வெற்றியின் படிக்கட்டு" என இவ்வாறு அவர் பேசினார்.

    English summary
    India's first claustrophobic suspense thriller movie Antony's teaser and audio was launched by director S.A.Chandrasekar in chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X