ஜன நாயகன்: எதிரிகள் தான் உன் வெற்றியை தீர்மானிக்கிறார்கள்.. எஸ்.ஏ.சி பேச்சு!

சென்னை: எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேஷியாவின் தலைநகர் கோலம்பூரில் நடைபெற்று வருகிறது.

இதில், பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், என்னுடைய மகன் ஒரு நடிகனாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இவ்வளவு பெரிய நடிகராவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் மட்டுமில்லை, விஜயை வைத்து இயக்கிய பல இயக்குனர்கள் தான். இப்பொழுது விஜய் ஜனநாயகனாக வந்து இருக்கிறார். விஜய் வெறும் ஜனநாயகன் மட்டும் இல்லை. மக்கள் நாயகன் இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் மக்களின் தலைவனாக வந்து இருக்கிறார். நான், ஏன் எப்படி சொல்கிறேன் என்றால், தன்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களை இந்த மேடையில் ஏற்றி அழகு பார்த்து இருக்கிறார். அதனால்தான் அவரை மக்களின் நாயகன், மக்களின் தலைவன் என்றேன்.

Jana nayagan audio launch SA Chandrasekar
Photo Credit:

எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு: என்னுடைய மகனுக்கு இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்த தமிழ் மக்களுக்கு நன்றி. விஜயின் முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு படத்தில் அவர் நடித்த முதல் காட்சி இப்பொழுதும் எனக்கு நினைவில் இருக்கிறது. முதல் படத்திலேயே விஜய் நேர்த்தியாக நடித்திருப்பார். அந்த படம் எந்த காரணத்திற்காகவோ சரியாக ஓடவில்லை. ஆனால், அவருக்குள் இருக்கும் நடிப்பை திறமையை நான் வெளியில் கொண்டு வந்து விட்டேன். என் மகனுக்குள் ஒளிந்து இருந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்து விட்டேன் என்றான் மகிழ்ச்சி என் மனதில் இப்போது வரைக்கும் இருக்கிறது.

பல துரோகங்கள்: எப்பொழுதுமே நம் வெற்றியை எதிரிகள் தான் தீர்மானிப்பார்கள் என்று சொல்வார்கள். அதுபோல விஜய் பலவிதமான கஷ்டங்கள், தோல்விகள், துரோகங்கள் இவை அனைத்தையும் தாண்டி தான் தளபதி விஜயாக இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். கஷ்டங்கள், வலிகளை, துரோகங்களை தாங்கிய ஒருவனால் தான் தலைவனாக முடியும். அப்படி ஒரு தலைவனாக என் மகன் வந்துள்ளார்.

இந்த அரங்கில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே என் மகனைத்தான் பார்க்க வந்திருக்கிறார்கள் என நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என் மகனை அப்படியே கட்டி அணைக்க வேண்டும் என தோன்றுகிறது என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிக்கொண்டு இருக்க. 800 மீட்டர் தொலைவில் இருந்து ஓடி வந்த விஜய் அப்பாவை கட்டி அணைத்தார். இந்த காட்சி அரங்கில் இருந்த பார்வையாளர்களை ஒரு நொடி மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X