எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது… மேடையில் உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

சென்னை : எனக்கும் விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது, எந்த வீட்டில்தான் பிரச்சினை இல்லை என்று, நான் கடவுள் இல்லை டிரைலர் வெளியீட்டு விழாவில் எஸ்.ஏ சந்திர சேகர் பேசினார்.

நான் கடவுள் இல்லை திரைப்படம் க்ரைம், த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

பருத்திவீரன் சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி,ரோகினி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானா ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெற்றிப்படங்கள்

வெற்றிப்படங்கள்

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய படங்களை படங்களுக்கு பெயர் போனவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். 80களில் இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு என்று தனி மவுசு இருக்கும். அந்த திரைப்படங்கள் திரையரங்கில் பல நாட்கள் ஓடின.

நான் கடவுள் இல்லை

நான் கடவுள் இல்லை

எஸ்.ஏ.சந்திரசேகரின் 71வது திரைப்படம் தான் இந்த நான் சிகப்பு மனிதன். அதேபோன்று புரட்சிகரமான கருத்துகளை கொண்ட ஒரு புதிய படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு அவர், நான் கடவுள் இல்லை என தலைப்பு வைத்துள்ளார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மகிழ்ச்சி அளிக்கிறது

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், இப்போ எல்லாம் நடிகைகள் படத்தில் நடிப்பதோடு சரி, டப்பிங் பேச வர மாட்டாங்க, புரமோஷனுக்கு வர மாட்டாங்க, ஆனால் இந்த படத்தில் நடித்த இனியா, சாக்ஷி அகர்வால் என இரண்டு நடிகைகள், நடித்து முடித்து, டப்பிங் பேசி, பட விழாவிற்கும் வந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

நாளை சேர்ந்துவிடுவோம்

நாளை சேர்ந்துவிடுவோம்

மேலும் , பேசிய அவர், சில தினங்களுக்கு முன்பு ஒரு விழாவில் விஜய்யின் பெயர் குறித்து பேசி இருந்தேன். இதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இருக்கிறது. எந்த வீட்டில்தான் பிரச்சனை இல்லை. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா... சில நாட்களில் அது சரியாக கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதுபோல் தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக் கொள்வோம், நாளை சேருவோம் என்றார். இந்த விழாவில், சமுத்திரக்கனி, இனியா, சாக்ஷி, விஜய் ஆண்டனி, இயக்குனர்கள் ராஜேஷ், பொன்ராம், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X