திருமணத்தடை நீங்கும் கோயிலுக்கு திடீர் விசிட்.. விஜய் ஜாதகத்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகர் வழிபாடு!
சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது நடிகர் விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் ஜாதகத்தை வைத்து திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் பூஜை நடத்தி உள்ளார்.
கிறிஸ்தவத்தை மட்டுமின்றி இந்து மதத்தையும் நடிகர் விஜய்யின் குடும்பம் தொடர்ந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மகன், மருமகள், பேரன், பேத்தி என யாருமில்லாமல் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 80வது பிறந்தநாள் விழாவை கோயிலில் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

லியோ வெற்றி விழாவுக்கு வரவில்லை: நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரை தவிர லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் குடும்பத்தில் இருந்து யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ள எஸ்.ஏ. சந்திரசேகர் அந்த சமயத்தில் சீரடி சாய் பாபா கோயிலுக்கு செல்வதாக அறிவித்து இருந்தார்.
திருமண தடை நீங்கும் கோயிலில் வழிபாடு: இந்நிலையில், தற்போது திருச்சி, திருப்பைஞ்சீலியில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீலிவனேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தி உள்ளார். அந்த கோயிலின் சிறப்பே திருமணம் ஆகாதவர்கள் சென்று வழிபட்டால் திருமணத் தடை நீங்கி கூடிய சீக்கிரமே திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
விஜய் ஜாதகத்தை வைத்து: லியோ படத்தில் இருந்தே இந்த ஜாதக மேட்டர் பெரிதாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகர் விஜய் உள்ளிட்ட குடும்பத்தினர் ஜாதகத்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்பு பூஜை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு பூஜை: திருச்சி, மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலியில் உள்ள ஸ்ரீலிவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மாலை அணிவித்து கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திடீரென அந்த கோயிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் இப்படியொரு சிறப்பு வழிபாடு நடத்த என்ன காரணம் என திரை வட்டாரத்தில் பல கேள்விகள் கிளம்பி உள்ளன. நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்காக அவரது அப்பா வேண்டிக் கொண்டாரா? அல்லது குடும்ப வாழ்வில் எந்தவொரு பிரச்சனையும் வரக் கூடாது என்பதற்காகவா? என கேள்விகள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











