கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா... விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்த எஸ்.ஏ.சி
சென்னை : தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களில் ஒருவராக உள்ளார் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்
விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் இயக்கியுள்ளார்
விஜயகாந்துடன் தொடர்ந்து கிட்டத்தட்ட 19 படங்களை இயக்கி இருந்த எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்திய விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்துபோய் பேசியுள்ளார்.

புரட்சி இயக்குனர்
தமிழ் சினிமாவில் அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். குறிப்பாக புரட்சி படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என பெயரெடுத்த எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார் .

சட்டம் ஒரு இருட்டறை
ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜயகாந்தை தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அந்த வகையில் சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தின் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக அறிமுகப்படுத்திய எஸ் ஏ சந்திரசேகர் அதைத் தொடர்ந்து 19 படங்களை விஜயகாந்தை வைத்து இயக்கி இருந்தார்.

வெள்ளி விழா
அதில் பெரும்பான்மையான படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடிய படங்கள். விஜயகாந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் இதனையும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இவர்களது கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் சட்டம் ஒரு இருட்டறை தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது பின் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

விஜயகாந்தின் தற்போதைய புகைப்படத்தை
சட்டம் ஒரு இருட்டறை வெற்றியை தொடர்ந்து பெரியண்ணா, வசந்த ராகம்,பட்டணத்து ராஜாக்கள், வீட்டுக்கு ஒரு கண்ணகி, செந்தூரப்பாண்டி, ராஜநடை, நெஞ்சிலே துணிவிருந்தால்,சாட்சி, ராஜதுரை,சட்டம் ஒரு விளையாட்டு, நீதியின் மறுபக்கம் என விஜயகாந்த் ஹீரோவாக நடித்த பல படங்களை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கி உள்ளார். இப்பொழுதும் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் படங்களை இயக்கியவரும் எஸ் ஏ சந்திரசேகர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கி உள்ளார். இந்த நிலையில் விஜயகாந்தின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்து போய் பேசியுள்ளார்

விஜயகாந்த் நடிகர் மட்டுமல்ல
சினிமாவில் வெற்றி பெற்ற விஜயகாந்த் அரசியலிலும் வெற்றி பெற வேண்டியவர் ஆனால் கால சூழ்நிலை காரணமாக அது நடைபெற முடியாமல் போனது. விஜயகாந்த் நடிகர் மட்டுமல்ல எனக்கு ஒரு நல்ல நண்பர் . நானும் அவரும் இணைந்து கிட்டத்தட்ட 17 படங்களுக்கு மேல் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா
தமிழ் சினிமாவில் விஜயகாந்தைப் போல் உதவி செய்பவர் யாரும் இல்லை. கடந்த 2,3 வருடங்களாக அவரை காண வேண்டும் என பலமுறை முயற்சித்தும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடைபெற முடியாமல் போனது. விஜயகாந்தின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ஒரு நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும் என மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











