SA Chandrasekhar: விஜய் இல்லாமல் பிறந்தநாள் கொண்டாடிய SA சந்திரசேகர்... அப்படி என்னதான் பிரச்சினை?
சென்னை: தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் எஸ்.ஏ சந்திரசேகர்.
இவரது மகனாக சினிமாவில் அறிமுகமான விஜய், இன்று கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக காணப்படுகிறார்.
இந்நிலையில், நேற்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடினார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்.
ஆனால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய் கலந்துகொள்ளாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளாத விஜய்: சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ சந்திரசேகர். அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகின. இதனால் 1980 முதல் 90 வரையிலும் முன்னணி இயக்குநராக வலம் வந்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரது பல படங்களிலும் கேப்டன் விஜயகாந்த் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.
அதேபோல், எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாக சினிமாவில் அறிமுகமானவர் தான் விஜய். ஒருபக்கம் அப்பாவின் சப்போர்ட், இன்னொரு பக்கம் தனது திறமையால் இன்று டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். அதேபோல், மக்கள் இயக்கம் மூலம் விஜய்க்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டதும் எஸ்.ஏ சந்திரசேகர் தான் என சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே மோதல் என செய்திகள் வெளியாகின.

விஜய் மக்கள் இயக்கம் செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியால் தான் தனது அப்பாவிடம் விஜய் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்காக கதை கேட்பதில் எஸ்.ஏ. சந்திரசேகரால் சில குளறுபடிகள் நடப்பதாக சொல்லப்பட்டன. இந்நிலையில், நேற்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடினார் எஸ்.ஏ சந்திரசேகர். இதனை மிக எளிமையாகவே அவர் கொண்டாடியுள்ளார்.
வீட்டில் தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர். முக்கியமாக இதில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 22ம் தேதி விஜய் தனது 49வது பிறந்தநாள் கொண்டாடினார். அப்போதும் அவர் தனது அப்பாவை சந்திக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அப்பாவின் பிறந்தநாளிலும் விஜய் அவரை சந்திக்கவில்லை.

சமீபத்தில் கூட, விஜய் அவரது வீட்டில் இருக்கும் பிரச்சினையை முதலில் தீர்க்க வேண்டும் என நடிகர் நெப்போலியன் கூறியிருந்தார். விஜய் அவரது அப்பாவை மதித்தாலே போதும் என்பதாக நெப்போலியன் கூறியிருந்தார். ஆனாலும், இதுவரை விஜய் அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இடையேயான பிரச்சினையின் உண்மையான காரணமும் தெரியவில்லை. அதற்கு என்ன தீர்வென்பதும் புரியவில்லை. இந்தச் சம்பவம் விஜய் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











