மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!
சென்னை: இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மனைவி ஷோபா சந்திரசேகர் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
1978ம் ஆண்டு அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
இவரது மகன் நடிகர் விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில், சில ஆண்டுகளாக தந்தைக்கும் மகனுக்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளன.

81வது பிறந்தநாள்
கடந்த ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஜூலை 2ம் தேதி அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 81வது பிறந்தநாளை இன்று கொண்டாடி உள்ளார். விஜய் ரசிகர்கள் பலரும் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது தனது மனைவி ஷோபா சந்திரசேகருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மனைவியுடன் கேக் கட்டிங்
சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், சாட்சி, வெற்றி, நான் சிகப்பு மனிதன், நாளைய தீர்ப்பு, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், நெஞ்சினிலே, ஒன்ஸ்மோர், ப்ரியமுடன், சுக்கிரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். 2018ம் ஆண்டு டிராபிக் ராமசாமி படத்தில் லீடு ரோலில் நடித்த எஸ்.ஏ. சந்திரசேகர் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது மனைவியுடன் கேக் கட்டிங் செய்து இந்த பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

சினிமா கேக்
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் 81வது பிறந்தநாள் என சினிமா தீமில் இயக்குநர் சேர், கிளாப் போர்ட், அவர் இயக்கிய படங்களின் பெயர்கள் அடங்கிய கேக்கை மனைவி ஷோபா சந்திரசேகர் ஊட்டிவிட எஸ்.ஏ. சந்திரசேகர் உண்ணும் காட்சிகள் அழகாக படம் பிடிக்கப்பட்டு டிரெண்டாகி வருகின்றன. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு காலை முதலே ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

விஜய் வரல
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் மகன் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், தந்தையின் பிறந்தநாளில் விஜய் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. கேக் கட்டிங் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் 'வாரிசு' விஜய் இல்லை. தனது தந்தைக்கு வாழ்த்தாவது சொன்னாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்
கடைசியாக நடிகர் விஜய் தனது பெற்றோர்களுடன் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதன் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் விஜய்யை ஒன்றாக இணைத்து ரசிகர்கள் எங்கேயும் காணவில்லை. கூடிய சீக்கிரமே அவர்கள் குடும்ப பிரச்சனை தீர்ந்து ஒன்றாக அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











