பாரதிய ஜனதா கட்சியில் இணைய போகிறாரா..? தீயாக பரவிய தகவல்.. அப்படி சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை: நான் பாஜகவில் சேர இருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்களை தங்கள் கட்சிக்கு இழுப்பது வழக்கமானதுதான்.
அப்படி பல நடிகர், நடிகைகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இடம்பெற்றுள்ளனர்.

உடனடி மறுப்பு
இந்நிலையில் சில நடிகர், நடிகர்கள் சில கட்சிகளில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகர் விஷால், பாஜகவில் இணைய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. அதை அவர் உடனடியாக மறுத்திருந்தார். அப்படி ஒரு எண்ணமே இல்லை என்றும் அது தவறான தகவல் என்றும் கூறியிருந்தார்.

குஷ்பு, சுகன்யா
நடிகை சுகன்யாவும் பாஜகவில் சேரப் போவதாகக் கூறப்பட்டன. தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்று அவர் சொன்னார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, பாஜகவில் இணைய இருப்பதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதை மறுத்து வந்தார், நடிகை குஷ்பு.

பாஜகவில் சேர்ந்தார்
இந்நிலையில், திடீரென டெல்லி சென்று பாஜகவில் சேர்ந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே, நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போவதாகச் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் இதுபற்றிய தகவல்கள் வந்துகொண்டு இருந்தன.

ஏன் பரப்பப்படுது?
இதை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டபோது அவர் மறுத்துள்ளார். 'இது தவறானத் தகவல். இதுபோன்ற தகவல் ஏன் பரப்பப்படுகிறது' என்று தெரியவில்லை என சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த கொரோனா காலகட்டத்தில் சத்தம் போடாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











