52 வருஷம் ஆகியும் காதல் குறையல.. மனைவிக்கு சொகுசு கார்.. திருமண நாள் பரிசளித்த எஸ்.ஏ. சந்திரசேகர்!

சென்னை: நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது திருமண நாளை முன்னிட்டு மனைவி ஷோபாவுக்கு விலையுயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி பரிசாக அளித்துள்ள வீடியோவை சற்றுமுன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறையினர் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட்டு வாழ்க்கைத் துணையை நொடிப் பொழுதில் விவாகரத்து செய்து பிரிந்து விடுகின்றனர். முன்னதாக 60ம் கல்யாணத்தை நடத்தி முடித்த எஸ்.ஏ. சந்திரசேகர் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆவதை தனது மனைவியுடன் கொண்டாடி வருகிறார்.

SA Chandrasekhar gifts a costly car to his wife and celebrating his wedding anniversay

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கிய நிலையில், தொடர்ந்து தனது பெற்றோர்களை அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்து வருகிறார். பழைய மனக்கசப்பை எல்லாம் மறந்துவிட்டு மீண்டும் தனது பெற்றோர்களை அவர் கவனித்துக் கொள்வதை பார்த்த ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.

52வது திருமண நாள்: வரும் ஏப்ரல் 26ம் தேதி எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவின் 52வது திருமண நாள் கொண்டாடப்படவுள்ளது. 1973ம் ஆண்டு இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் முன்னிலையில், கிறிஸ்துவ முறைப்படியும் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்நிலையில், தனது மனைவிக்கு திருமண பரிசாக சொகுசு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

SA Chandrasekhar gifts a costly car to his wife and celebrating his wedding anniversay

சொகுசு கார் பரிசு: திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது மனைவி ஷோபாவை அழைத்துக் கொண்டு BMW ஷோ ரூமுக்கு சென்ற எஸ்.ஏ. சந்திரசேகர் அங்கே கேக் வெட்டிக் கொண்டாடி பிராண்ட் நியூ BMW காரை வாங்கிக் கொடுத்துள்ளார். பட்டாசு வெடிக்க புதிய காரை ஷோரூமில் இருந்து எடுத்துக் கொண்டு தனது மனைவியை உட்கார வைத்து ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறையாத காதல்: இளம் நடிகர்கள் சிறு வயதிலேயே தங்கள் ஜோடிகளை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் நிலையில், சினிமாவின் மூத்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் எல்லாம் எப்படி இன்னும் அன்பு குறையாமல் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் பாருங்கள் என பலரும் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "WEDDING ANNIVERSARY GIFT FOR MY LOVE" என ஹார்ட்டீன் எல்லாம் போட்டு அசத்தியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

தாத்தாவை போல பேரன்: எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் விஜய் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி வசூல் மன்னனாக கோலிவுட்டில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆனால், அவரது மகன் சஞ்சய் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகாமல், தனது தாத்தாவை போல இயக்குநராக மாறியுள்ளார். சந்தீப் கிஷனை வைத்து லைகா தயாரிப்பில் படம் எடுத்து வருகிறார். எம்புரான் படம் லைகா நிறுவனத்துக்கு சற்றே நிம்மதியை கொடுத்த நிலையில், ஜேசன் சஞ்சய் படம் விறுவிறுப்பாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்தியன் 3 படத்தையும் எப்படியாவது முடித்து ரிலீஸ் செய்யும் முயற்சியிலும் லைகா இறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X