மீண்டும் களத்தில் எஸ்ஏ சந்திரசேகர்... நான் கடவுள் இல்லை படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

சென்னை : நடிகர் சமுத்தரகனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் நான் கடவுள் இல்லை.

நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் எஸ்ஏசி.

படத்தின் ட்ரெயிலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்

நீதிக்கு தண்டனை, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சமூக நீதி படங்களை எடுத்து புகழ்பெற்றவர் எஸ்ஏ சந்திரசேகர். நீண்ட நாட்களாக இவர் படங்களை இயக்குவதில் இருந்து விலகியிருந்தார். ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நான் கடவுள் இல்லை படம்

நான் கடவுள் இல்லை படம்

இந்நிலையில் இவர் தற்போது நான் கடவுள் இல்லை என்ற படத்தின்மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுததுள்ளார். புரட்சிகரமான கருத்துக்களுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ்ஏசி.

சமுத்திரக்கனி நடிப்பு

சமுத்திரக்கனி நடிப்பு

படத்தில் சிபி சிஐடி அதிகாரியாக சமுத்திரகனி நடித்துள்ளார். மேலும் மிரட்டலான வில்லனாக சரவணன் நடித்துள்ளார். இவர்களுடன் இனியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற வழக்கறிஞராக எஸ்ஏ சந்திரசேகரும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குழந்தைகளை மையமாக கொண்ட படம்

குழந்தைகளை மையமாக கொண்ட படம்

மேலும் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் மயில்சாமியின் மகனும், நடிகை ரோகிணியும் நடித்துள்ளனர். படத்தில் இமான் அண்ணாச்சியும் காமெடி களத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைத்துள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்ஏசி தெரிவித்துள்ளார்.

த்ரில்லர் படம்

த்ரில்லர் படம்

முதலில் குறும்படமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை த்ரில்லர் படமாக மாற்றி இயக்கியுள்ளார் எஸ்ஏசி. இந்தப் படம் சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான படமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீசுக்கு தயாராகிவரும் இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X