விஜய்யின் அமைதிக்கு பின்னால் இருக்கும் சோகம்…எஸ்.ஏ.சி சொன்ன தகவல் !

சென்னை : விஜய்யின் அப்பாவும், நடிகரும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் யார் இந்த எஸ்.ஏ.சி. என்கிற பெயரில் தன் வாழ்க்கை பற்றி பேசி வருகிறார்.

Recommended Video

'மகன் விஜய்க்காக பட்ட சிரமம்'- SA Chandrasekhar | Part 4 | Filmibeat Tamil

அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார். முதல் வீடியோவில் எங்கிருந்து எனது வாழ்க்கை தொடங்கியது என்று உருக்கமாக பேசியிருந்தார்.

இரண்டாவது வீடியோவில் தன் குடும்பம் குறித்தும், விஜய் பற்றியும் பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.

யார் இந்த எஸ்.ஏ.சி.

யார் இந்த எஸ்.ஏ.சி.

எஸ்.ஏ.சந்திரசேகர், தனது யூடியூப் சேனலில் தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து, தி நகர் பாண்டி பஜாரில் பிளாட்பார்மில் திட்டத்தட்ட 47 நாட்கள் படுத்திருந்ததாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ பலரின் மனதை கலங்க வைத்தது என்று சொல்லலாம்.

குடும்பம் பற்றி பேசிய எஸ்.ஏ.சி

குடும்பம் பற்றி பேசிய எஸ்.ஏ.சி

இதையடுத்து இரண்டாவது வீடியோவில், தனது குடும்பம் குறித்து பேசியிருந்தார். அதில், எனக்கு கடவுள் இரண்டு குழந்தைகளை கொடுத்தார். வித்யா, விஜய். வித்யா படுசுட்டியான குழந்தையாக இருந்தாள். விஜய்க்கு அவளை ரொம்பப்பிடிக்கும் எப்போதும் அவளுடனே விளையாடிக்கொண்டு இருப்பார். ஆனால், மூன்றரை வயதில் இறைவன் வித்யாவை கூப்பிட்டுக்கொண்டார் என்று மிகவும் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.

ஆளே மாறிவிட்டார் விஜய்

ஆளே மாறிவிட்டார் விஜய்

வித்யாவின் மரணத்திற்கு பிறகுதான் விஜய் ஆளே மாறிவிட்டார். அதற்கு முன் துருதுருவென ஓடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்த விஜய் மிகவும் அமைதியாக மாறிவிட்டார். படத்தில் வசனம், டான்ஸ், ரொமான்ஸ், காமெடி என பட்டையை கிளப்பும் விஜய் திரைக்கு பின்னால் சாதுவாகவே இருப்பார்.

மனதில் இருக்கும் சோகம்

மனதில் இருக்கும் சோகம்

படப்பிடிப்பு தளத்தில் கேமரா முன் மிரட்டலாக பேசிவிட்டு அந்த காட்சி முடிந்ததும், அமைதியாக அமர்ந்துவிடுவார். விஜய் அவருக்கு என்று ஒரு சில நண்பர்களை வைத்து இருக்கிறார்கள் அவர்களிடம் மட்டும்தான் பேசுவார். அவருடை தங்கை வித்யாவின் மரணத்தை இவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும், விஜய்யின் அமைதிக்கு பின்னால் இருக்கும் சோகம் இதுதான் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X