சூர்யாவுக்கு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல அப்பா எஸ்.ஏ.சி.யும் ஃபுல் சப்போர்ட்

By Siva

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா கூறியதாவது,

SA Chandrasekhar supports Suriya

ஆசிரியர்களோ, மாணவர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து ஏன் கண்டு கொள்ளவில்லை. இது நம் வீட்டு குழந்தைகளின் கல்வியை மாற்றப் போகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களும் உள்ளது, அச்சம் தரக்கூடிய விஷயங்களும் உள்ளது.

குறைவான ஆசிரியர்கள் உள்ள பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்திருப்பது சரி அன்று. அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்காமல் நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் சூர்யா.

சூர்யா எதுவும் தெரியாமல், புரியாமல் பேசுவதாக பாஜக மற்றும் அதிமுகவினர் தெரிவித்தனர். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்ல அஜித், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். எதையும் தெரியாமல் பேசவில்லை என்று சூர்யாவும் பதில் அளித்தார்.

சூர்யாவுக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் ஆதரவு தெரிவித்தார். மேலும் திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் சூர்யா குறித்து கூறியதாவது,

நல்ல கருத்துகளை பேசக் கூடாது. சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லாமல் உள்ளோம். சூர்யா விஷயத்திலும் அது தான் நடந்திருக்கிறது. இருப்பினும் சூர்யா போன்று அனைவரும் நல்ல கருத்துகளை பேச வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

ஏழை, எளிய மாணவ, மாணவிகளை படிக்க வைக்கும் சூர்யாவுக்கு புதிய கல்விக் கொள்கை பற்றி பேச முழு உரிமை உள்ளது. அவரை கேள்வி கேட்கும் சிலருக்கு தான் தாங்கள் எதை பற்றி பேசுகிறோம் என்றே தெரியவில்லை என சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சூர்யாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X