Don't Miss!
- News
வன்முறையோட வலி தெரியுமா? நான் அனுபவிச்சிருக்கேன் தெரியுமா? ஸ்ரீநகரில் உருக்கமாக பேசிய ராகுல் காந்தி
- Lifestyle
பெண்களே! உங்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு இவைதான் காரணமாம்...ஜாக்கிரதையா இருங்க..!
- Finance
வெறும் 3 நாளில் ரூ.11.6 லட்சம் கோடி இழப்பு.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணீர்..!!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Technology
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
என் மகனிடம் அதை பல முறை சொல்லிட்டேன்.. விஜய் மக்கள் இயக்கம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் பேச்சு!
சென்னை: விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் அதிரடியாக கூறியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 3ம் தேதி நடிகர் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
மனைவி ஷோபா சந்திரசேகர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் அவர் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்தது.
மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!

விஜய் பங்கேற்கவில்லை
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது. தனது அனுமதி இல்லாமல் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தக் கூடாது என அப்பா சந்திரசேகரை கண்டிக்கும் தொனியில் நடிகர் விஜய் உத்தரவு போட்டார். இந்நிலையில், அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பிறந்தநாள் விழாவிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை.

சதாபிஷேக விழா
மகன், மருமகள், பேரக் குழந்தைகள் சூழ நடைபெற வேண்டிய சதாபிஷேக விழாவை திருக்கடையூர் கோயிலில் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சந்திரசேகர் மட்டுமே கலந்து கொண்டு செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் கேள்வி எழுப்ப செய்துள்ளது. 80 வயதிலும் நான் கடவுள் இல்லை படத்தை இயக்கி வரும் எஸ்.ஏ. சந்திரசேகர் தனியாக யூடியூப் சேனலையும் ஆரம்பித்து தான் கடந்து வந்த பாதை பற்றியும் மகனுக்காக செய்த தியாகங்கள் பற்றியும் பேசி வருகிறார்.

வலுவிழந்தது விஜய் மக்கள் இயக்கம்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ. சந்திரசேகரிடம் விஜய் மக்கள் இயக்கம் பற்றி கேள்வி எழுப்பிய நிலையில், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என்றும், அதிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டால் தான் அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றும் இதுகுறித்து பலமுறை மகன் விஜய்யிடம் எடுத்துக் கூறியதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசி உள்ளார்.

அதுதான் பிரச்சனை
நடிகர் விஜய்யை முழு நேர அரசியல்வாதியாக களமிறக்க தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் செய்யும் முயற்சி தான் நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையே இப்படியொரு பிளவு ஏற்படக் காரணம் என்றும் கூறுகின்றனர். சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது, அதை விட்டு விட்டு வீணாக அரசியலுக்கு வர வேண்டாம் என்றும் தனது விஜய் மக்கள் இயக்கத்தை படிப்படியாக வலுவடைய செய்யும் பணிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

வாரிசு
இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். முதன்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், தனுஷின் பட்டாசு படத்தில் நடித்த மெஹ்ரின் பிர்சடாவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். வரும் பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் படப்பிடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார் விஜய். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.