twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், பான் இந்தியா இயக்குநர்..சகலகலா வித்தகர் எஸ்.ஏ.சந்திரசேகர்

    |

    சென்னை: நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்த இடத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய்யை தயார் படுத்தி செதுக்கி கொண்டுவந்ததில் தந்தை எஸ்.ஏ.சிக்கு பெரும் பங்கு உண்டு.

    விஜயகாந்த் எனும் நடிகரை திரையுலகில் அதிகம் பயன்படுத்தியதும், அவருக்கும் மீண்டும் ஒருவாழ்க்கைக் கிடைக்க படம் கொடுத்ததும் எஸ்.ஏ.சிதான்.

    திமுக அனுதாபி, அதிமுகவுக்கு உதவியவர், தனிக்கட்சி என எஸ்.ஏ.சிக்கு பல முகங்கள் உண்டு.

    D Block Review: லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த உண்மை சம்பவக் கதை.. டி ப்ளாக் விமர்சனம் இதோ! D Block Review: லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த உண்மை சம்பவக் கதை.. டி ப்ளாக் விமர்சனம் இதோ!

    வாழ்க்கையை திருப்பிய நாடக மேடை

    வாழ்க்கையை திருப்பிய நாடக மேடை

    எஸ் ஏ சந்திரசேகர் ராமேஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர். திரைத்துறையில் சாதிக்கும் வேட்கையோடு 1960 களின் இறுதியில் சென்னை வந்தவர் கடுமையாக கஷ்டப்பட்டு நடிகர் ஜெய்கணேஷ் தொடர்பு கிடைத்து அவருடன் சேர்ந்து மனித தெய்வம் என்கிற பெயரில் ஒத்தவாடை தியேட்டரில் நாடகம் போட்டுள்ளார். அங்கு தலைமை ஏற்க வந்த நீலகண்டன் என்பவர் எஸ்.ஏ.சியை வாழ்த்தினார். அவரால் தனது வாழ்க்கையே மாறப்போகுது என எஸ்.ஏ.சி. அப்போது அறியவில்லை.

    ஷோபாவுடன் மலர்ந்த பால்யபருவ காதல்

    ஷோபாவுடன் மலர்ந்த பால்யபருவ காதல்

    மறுநாள் அவரை வாகினி ஸ்டுடியோவுக்கு வரவழைத்தார் நீலகண்டன். சில வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்தார். தன் வீட்டின் பின்புறம் ஒரு அறை ஒன்றை தங்க கொடுத்தார். அங்கேயே தங்கி எஸ்.ஏ.சி சினிமாவில் உதவி இயக்குநர், அசோசியேட் இயக்குநர் என படிப்படியாக உயர்ந்தார். எம்ஜிஆரின் நம்நாடு, எங்க வீட்டு பிள்ளை, சிவாஜியின் வசந்த மாளிகை உள்ளிட்ட படங்களில் எஸ்.ஏ.சி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். எஸ்.ஏ.சியின் துணைவி, விஜய்யின் தாயார் ஷோபாவும் அங்குதான் அறிமுகமானார். 5 ஆண்டுகள் பள்ளி பருவம் தொடங்கிய காதல் இறுதியில் திருமணத்தில் முடிந்தது. நீலகண்டனின் மகள்தான் ஷோபனா, இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.

    திரையுலகின் ஆரம்பகால பயணம்

    திரையுலகின் ஆரம்பகால பயணம்

    ஆழமான காதலுடன் திருமண பந்தத்தில் இணைந்த எஸ்.ஏ.சி ஷோபனா திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சிரமத்துடனே தொடங்கியது. மகன் விஜய் பிறந்தார். மகள் பிறந்தார். எஸ்.ஏ.சி படிப்படியாக உயர்ந்து இயக்குநரானார். அவள் ஒரு பச்சைக்குழந்தை என்கிற படத்தை இயக்கினார். விஜயகுமார் ஹீரோ, இளையராஜா இசை படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் விஜய்காந்தின் நட்பு கிடைத்தது விஜயகாந்தை வைத்து சட்டம் ஒரு இருட்டறை என்கிற படம் எடுத்தார். படம் சூப்பர் ஹிட். யார் இந்த சந்திரசேகர் என தமிழ் திரையுலகம் திரும்பிபார்த்தது. பின்னர் இநதப்படம் தான் அந்தா கானூன் என இந்தியில் எடுக்கப்பட்டது, ரஜினி இப்படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

    விஜய் காந்தை வைத்து எடுத்த வெற்றிப்படங்கள்

    விஜய் காந்தை வைத்து எடுத்த வெற்றிப்படங்கள்

    விஜயகாந்த் எஸ்.ஏ.சியால் வளர்ந்தாரா, விஜயகாந்தால் எஸ்.ஏ.சி வளர்ந்தாரா என பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இயங்கினர். விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சி கொடுத்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட். விஜயகாந்தை வைத்து அதிக படங்களை எஸ்.ஏ.சி தான் இயக்கி இருப்பார் எனலாம். 18 படங்களை இயக்கியுள்ளார். இடையில் விஜயகாந்த் மார்க்கெட் டவுனாகி இனி அவர் அவ்வளவுதான் என்கிற நிலையில் எஸ்.ஏ.சியில் சாட்சி படம் விஜயகாந்துக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின் விஜயகாந்துக்கு வெற்றிமுகம் தான்.

    பான் இந்தியா இயக்குநராக 1980 களிலேயே வலம் வந்த எஸ்.ஏ.சி

    பான் இந்தியா இயக்குநராக 1980 களிலேயே வலம் வந்த எஸ்.ஏ.சி

    குறுகிய காலத்தில் தமிழ், இந்தியில் பல படங்கள், கன்னடம், தெலுங்கு என பான் இந்தியா இயக்குநராக மாறிப்போனார் எஸ்.ஏ.சி. திமுக அனுதாபியான எஸ்.ஏ.சி கருணாநிதி கதை வசனத்தில் இயக்கிய நீதிக்கு தண்டனை படம் அப்போதைய அரசியல் படமாக பார்க்கப்பட்டது. பின்னர் ரஜினியை வைத்து நான் சிகப்பு மனிதன் என்கிற படத்தை எடுத்தார். அதிலும் அப்போதுள்ள அரசியலை லைட்டாக தொட்டிருப்பார். இந்தப்படத்தில் அப்போது பிரபலமாக இருந்த பாக்யராஜையும் நடிக்கவைத்திருப்பார்.

    மகனை ஹீரோவாக்கிய எஸ்.ஏ.சி

    மகனை ஹீரோவாக்கிய எஸ்.ஏ.சி

    ஒருபக்கம் பிரபல இயக்குநர் கதாசிரியராக இருந்துக்கொண்டே மறுபுறம் தனது மகன் விஜய்யை சினிமாவில் முன்னணி நடிகராக கொண்டுவரவேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார். தனது படங்களில் குழந்தை நட்சத்திரமாக விஜய்யை அறிமுகப்படுத்தி அவருக்கு பாலபாடம் நடத்தினார். அது பிற்காலத்தில் விஜய்க்கு உதவியாக அமைந்தது எனலாம். இடையிடையே மனைவியுடன் சேர்ந்து படங்களையும் சொந்தமாக தயாரித்தார். இவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.

    மகனை செதுக்கிய எஸ்.ஏ.சி

    மகனை செதுக்கிய எஸ்.ஏ.சி

    18 வயத்தில் விஜய் கல்லூரி வாழ்க்கை முடிவுறும் நேரத்தில் அவரை வைத்து 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்கிற படத்தை எடுத்தார். அடுத்த ஆண்டே முன்னணி நடிகர் நண்பர் விஜயகாந்த் கவுரவ நடிகராக நடிக்க விஜய்யை கதாநாயகனாக போட்டு செந்தூரப்பாண்டி என்கிற படத்தை எடுத்தார். விஜயகாந்தின் புகழ் மூலம் விஜய் பட்டிதொட்டியெங்கும் போய் சேர்ந்தார். விஜய்க்கு பேர் வாங்கிக்கொடுத்த படம் அது.

    ஹீரோவாக உயர்ந்த விஜய் இளைய தளபதி பட்டம் கொடுத்த எஸ்.ஏ.சி

    ஹீரோவாக உயர்ந்த விஜய் இளைய தளபதி பட்டம் கொடுத்த எஸ்.ஏ.சி

    தொடர்ந்து விஜய்யை வைத்து ரசிகன் என்கிற படத்தை இயக்கினார். இதில் விஜய்க்கு இளைய தளபதின்னு பட்டம் கொடுத்தார் அதுவே பின்நாளில் விஜய்க்கு நிரந்தரமானது. பின்னர் விஷ்ணு என்கிற படத்தை இயக்கினார். இடையில் 2 படங்களில் விஜய் வெளியில் நடித்திருந்தார். தொடர்ந்து விஜய் மற்ற இயக்குநர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இடையில் 1997 ஆம் ஆண்டு சிவாஜியுடன் விஜய்யை இணைத்து ஒன்ஸ்மோர் படத்தை எடுத்தார். இதன் பின்னர் விஜய்யின் வெற்றிப்பயணம் தொடர்ந்தது.

    உச்ச நடிகராக விஜய்யை மாற்றிய எஸ்.ஏ.சி

    உச்ச நடிகராக விஜய்யை மாற்றிய எஸ்.ஏ.சி

    ஒரு தந்தையாக, ஆசானாக நடிகர் விஜய்யின் வெற்றியில் எஸ்.ஏசியின் பங்கு மகத்தானது. தொடர்ந்து விஜய்யை பிராண்ட் பண்ணுவதில் தனது திரையுலக அனுபவத்தை எஸ்.ஏ.சி சிறப்பாக பயன்படுத்தினார். அது இன்று விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் உச்ச சம்பளம் வாங்கும் நடிகர் அளவுக்கு விஜய்யை உயர்த்தியுள்ளது.

    அரசியலில் கால் பதித்த எஸ்.ஏ.சி

    அரசியலில் கால் பதித்த எஸ்.ஏ.சி

    எஸ்.ஏ.சி மகன் விஜய்யின் காவலன் படம் சிக்கலுக்கு உள்ளானபோது தனது மகனுடன் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார். அவர் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய சொன்னார். அதனை ஏற்று 2011 தேர்தலில் விஜய் ரசிகர்கள் அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்றினர். பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையில் விலகினார். ஆரம்பகாலத்தில் திமுக ஆதரவாளராக எஸ்.ஏ.சி இருந்தார். ஒரு கட்டத்தில் தனது மகன் விஜய்யை அரசியலில் இறக்க ஒரு இயக்கத்தை எஸ்.ஏ.சி ஆரம்பித்தார். ஆனால் அதற்கு விஜய் ஆதரவளிக்காததால் கலைத்து விட்டார்.

    விஜய்யை முதல்வராக்குவாரா, எஸ்.ஏ.சி?

    விஜய்யை முதல்வராக்குவாரா, எஸ்.ஏ.சி?

    தொடர்ந்து எஸ்.ஏ.சி தனது திரைப்பயணத்தை தொடர்கிறார். அவரது 50 ஆண்டுகாலத்துக்கும் மேற்பட்ட திரையுலக அனுபவம் ஒரு பெரிய நடிகரை திரையுலகிற்கு தந்துள்ளது, பல அற்புதமான படங்களை தந்துள்ளார். தொடர்ந்து எஸ்.ஏ.சி அவரது பாதையில் பயணிக்கிறார். மகனை அரசியலிலும் ஈடுபடுத்தி முதல்வராக்கணும் என்கிற எண்ணம் ஒரு காலத்தில் நிறைவேறினாலும் நிறைவேறும். எஸ்.ஏ.சி நினைத்தால் அதையும் சாதிப்பார். காரணம் அதன் சூட்சமத்தையும் அறிந்திருப்பவர் எஸ்,ஏ.சி.

    English summary
    SA Chandrasekhar is the pride of many achievements in Indian cinema. He is a Multi-Talented Person who is an actor, producer, pan India director, and father of the Leading Tamil Actor Vijay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X