தளபதி விஜய்க்கு பாட்டு பாடணும்-சரிகமப அஸ்லாம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சென்னை: தளபதி விஜய் திரைப்படத்திற்கு பாட வேண்டும் என்று ஜி தமிழ் டிவியின் சரிகமப இசை நிகழ்ச்சியில் முதல் பரிசு வென்ற அஸ்லாம் கூறியுள்ளார். இவனெல்லாம் எங்கே ஜெயிக்கப்போறான் என்று கிண்டல் செய்தவர்களின் முகத்தில் கரியை பூசியதோடு நில்லாமல் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். இவர் தன்னுடைய பாடல் அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் இந்த டைட்டில் வின் பண்ணுதை வேற லேவல்ல ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்றேன். அந்த மூவ்மெண்ட்டை இன்னும் என்னால் நம்ப முடியலை. அந்த வின்னிங் மூமென்ட்டை நான் நினைச்சி பாக்குறேன். நான் எப்படி வின் பண்னேன்னு கூட என்னால யோசிக்கவே முடியலை. டிவில பாக்கும்போது தான் எனக்கு அது புரியும்.

Sa Re Ga Ma Pa Title Winner Aslam Exclusive Interview

இருந்தாலும், அந்த அனுபவம் அற்புதமா இருந்தது. அவ்வளவு ஜனங்களுக்கு மத்தியில ஸ்டேடியத்துல பாடுனது மறக்க முடியாத அனுபவமா இருந்திச்சி. இதுக்கு முன்னாடி எத்தனையோ ஸ்டேஜ்ல பாடியிருக்கேன். அதனால ஜனங்க மத்தியில ஸ்டேஜ்ல பாடும்போது பயம் இல்லை. கான்ஃபிடன்ஸ், ஜனங்க நம்மள பாக்கும்போது அவங்களோட வைப்ரேஷன் நமக்கு கிடைக்கும்.

அதையெல்லாம் பாக்கும்போது, ஃபைனலிஸ்ட்களுக்கு பாடுறதுக்கு நிறைய எனர்ஜி கிடைக்கும். அந்த ஜனங்க எல்லாம் நம்மள உற்சாகப்படுத்துறதுக்காக கை தட்டுவாங்க. அதனால் செமையா இருந்திச்சி.

ஒரு எபிசோடல, அது செமி கிளாசிகல் ரவுண்ட் அது. அதுல ஆடல் கலையே தேவன் தந்தது பாட்டு எனக்கு கொடுத்தது. எனக்கு தெரிஞ்சது மெலடி, மாஸ் பாட்டு தான். அதெல்லாம் நான் பாடுவேன். செமி கிளாசிகல் பாட்டு பாடுவேன். இருந்தாலும் அவ்வளவு கம்ஃபர்ட்பிளா எனக்கு இருக்காது. அதனால எனக்கு அந்த ஒரு டென்ஷன் இருந்திச்சி. ஆனாலும் நான் நல்லா பாடுனேன்னு நினைக்கிறேன்.

எனக்கு எல்லா நடிகர்களுக்கும் பாடணும்னு தான் ஆசையா இருக்கு. அதுலயும் ஸ்பெஷலா தளபதி விஜய் சாருக்கு பாடணும்கிறது என்னோட விருப்பம். நான் ஃபைனல்ல வெறித்தனம் சாங் பாடிதான் ஜெயிச்சேன். அந்த சாங் பாடும்போது கொஞ்சம் டென்ஷனா தான் இருந்திச்சி.

காரணம், தளபதியோட ஃபேன்ஸுங்க நிறைய பேர் இருப்பாங்க. அவங்க முன்னாடி கொஞ்சம் எனர்ஜெட்டிக்கா பாடணுமேங்குற அந்த டென்ஷன் இருந்தது. இருந்தாலும், அது கொஞ்சம் வெறித்தனமா இருந்திச்சி. அந்த சாங் பாடும்போது ஆரம்பத்தில இருந்து எண்ட் வரைக்கும் ஆடியன்ஸோட ஃபுல் எனர்ஜியும் எனக்கு கிடைச்சது. அதனால சரிகமப டைட்டிலையும் ஜெயிக்க முடிஞ்சது என்றார் அஸ்லாம்.

More from Filmibeat

Read more about: aslam zee tamil tv டிவி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X