twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.. மியூசிக் டைரக்டராகிறார் சாதக பறவைகள் சங்கர் !

    |

    சென்னை : தமிழ் இசை தந்த உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகன் 'சாதக பறவைகள்' சங்கர் 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    வார்வின் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஐ ராஜா தயாரித்த, 'தென்மேற்கு பருவக்காற்று', 'நீர் பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட படங்களில் முன்னணி இயக்குனர் சீனுராமசாமியிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தயானந்தன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார்.

    saadhaga paravaigal Shankar music composes the film kundrathiley kumaranukku kondattam

    இத்திரைப்படம் இன்றைய காலகட்டத்தில், மனித வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் மதுவுக்கு அடிமையான ஒருவர், தன்னை உணர்ந்து, அதிலிருந்து விடுபட்டு, முன்னெடுக்கும் புரட்சிகரமான நடவடிக்கைகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டுகிறது. தனிமனித வாழ்வின் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக இது அமையும்.

    சாஸ்திரீய இசை அனைவருக்கும் புரியவில்லை என்ற போதிலும், ராகத்திலும் தாளத்திலும் மயங்கி, மொழியும் அர்த்தமும் புரியாமல் ரசித்து வந்த நிலையில், எளிய தமிழில் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் இசைப்பங்களிப்புப் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் பக்தி இலக்கிய படைப்புகளை உருவாக்கிய அவர், திருவாசகம், பன்னிரு திருமுறைகளுக்கு அப்பாற்பட்டு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் பாடல்களை உருவாக்கி உள்ளார்.

    அவரது மகனான 'சாதக பறவைகள்' இசைக்குழு அமைப்பாளர் சங்கர், உலகெங்கிலும் சுமார் 8000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர், தொடர்ந்து நடத்தியும் வருகிறார். தீவிர இசை ரசிகர், பல்வேறு இசை வடிவங்களில் முறையான தேர்ச்சி பெற்றவர். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல புதுமைகளை புகுத்தியிருக்கிறார்.

    சமீபத்தில் இப்படத்தின் தீரத் தீர் எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் 'அக்கப்பல்லா' என்றழைக்கப்படும் பாரம்பரிய முறையில், மிகக் குறைவான இசைக்கருவிகளின் துணையுடன், வாய்மொழியாகவே ஒரு முழுப்பாடலையும் வடிவமைத்திருக்கிறார். இப்பாடலை வைரபாரதி எழுதியிருக்கிறார்.

    இப்படத்தில் விஜய் டிவி புகழ் பிராஜின், அறிமுக நாயகி ரியாமிகா, இயக்குனர் கே பாக்யராஜ், இமான் அண்ணாச்சி மற்றும் ஷகிலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

    English summary
    Saadhaga paravaigal Shankar has turned as a Music director in the film Kundrathiley Kumaranukku Kondattam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X