Saaho Box Office: ரஜினியை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ்... சாஹோ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள சாஹோ திரைப்படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல்செய்துள்ளது.

Recommended Video

Saaho Movie Review

சென்னை: சாஹோ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் சாஹோ. பாகுபலி பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹோ படம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இப்படமும் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

சாஹோ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் நேற்று ரிலீசானது. படம் விமர்சன ரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. பிரமாண்டத்தை தவிர படத்தில் வேறு எதுவும் இல்லை என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

இந்நிலையில் சாஹோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தியா முழுவதும் இப்படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூலித்துள்ளது. இந்தியில் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த 3வது படம் சாஹோவாகும்.

ரஜினியை முந்திய பிரபாஸ்

ரஜினியை முந்திய பிரபாஸ்

இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களை பொறுத்தவரை, பாகுபலி 2வது பாகம் தான் அதிக வசூல் செய்த படம். அதற்கு அடுத்து ரஜினியின் 2.0 படம் தான் இருந்தது. தற்போது சாஹோ திரைப்படம் ரஜினியின் 2.0 படத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் முதல் இரண்டு இடங்களில் பிரபாஸ் படம் தான் இருக்கிறது

படக்குழுவின் எதிர்பார்ப்பு

படக்குழுவின் எதிர்பார்ப்பு

சாஹோ திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.350 கோடியாகும். இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தெலுங்கில் ரூ.35 கோடி, தமிழில் ரூ.15 கோடி, இந்தியில் ரூ.10 என மொத்தம் ரூ.60 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டது குறிப்பிடத்தது.

கலக்கத்தில் படக்குழு

கலக்கத்தில் படக்குழு

படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களே அதிகமாக வந்துள்ளன. எனவே முதல் நாள் அளவுக்கு அடுத்த இரண்டு நாட்கள் வசூல் இருக்குமா என்பது சந்தேகமே. இதனால் படக்குழு கலக்கத்தில் இருப்பதாகவே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X