இரண்டு பக்கமும் அடி வாங்கியும் முதல் நாளே ரூ. 68 கோடி வசூலித்த சாஹோ

By Siva

சென்னை: பிரபாஸின் சாஹோ படம் ரிலீஸான முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ. 68 கோடி வசூல் செய்துள்ளது.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரபாஸின் சாஹோ படம் கடந்த 30ம் தேதி வெளியானது. படத்தை பார்த்த விமர்சகர்கள் சகிக்கவில்லை, தாங்க முடியவில்லை, மொக்கை என்று கழுவிக் கழுவி ஊத்தினார்கள். ஆனால் ரசிகர்கள் அதை எல்லாம் காதில் வாங்கத் தயாராக இல்லை.

சாஹோ படம் பிரபாஸ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

சாஹோ

சாஹோ

தமிழ், தெலுங்கு, இந்தி, மாலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான சாஹோ முதல் நாள் மட்டும் இந்தியாவில் ரூ. 68.01 கோடி வசூல் செய்துள்ளது. இருப்பினும் சாஹோவால் பாகுபலி 2 படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை. பாகுபலி 2 படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 121 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பாகுபலி 2 சாஹோவை விட அதிக வசூல் செய்தது. சாஹோ படத்தின் இரண்டாவது நாள் வசூல் ரூ. 65 கோடி ஆகும்.

ஷாருக்கான் ராசி

ஷாருக்கான் ராசி

பாகுபலி 2 உலக அளவில் ரூ. 1,810 கோடி வசூல் செய்தது. மேலும் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் அண்மை கால படங்களை விமர்சகர்கள் கேவலமாக விமர்சித்தாலும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்து ஹிட்டாக்கிவிடுவார்கள். தற்போது சாஹோவுக்கு ஷாருக்கான் ராசி தான் ஒர்க்அவுட் ஆகியுள்ளது.

கிண்டல்

கிண்டல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாஹோ படத்தின் கதையே சொதப்பல், ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள், கண்ணை கட்டும் அளவுக்கு டுவிஸ்ட்டுகள் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். நாங்கள் வேண்டுமானாலும் ரூ. 500 தருகிறோம் தயவு செய்து படத்தை நிறுத்துங்கள் என்று தியேட்டர்களில் உள்ளவர்கள் கதறுவது போன்று மீம்ஸ் போட்டு சாஹோவை கலாய்த்துள்ளனர். படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் வேறு கசிந்துவிட்டது.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய பிரமாண்டங்களில் நடித்த பிரபாஸை சாஹோவில் வீணடித்துவிட்டார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பிரபாஸ் எப்படி இது போன்ற கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சாஹோ படத்திற்காக பிரபாஸ் 2 ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பாகுபலி போன்று செமயாக ஒரு படம் வரும் என்று எதிர்பார்த்தவர்கள் சாஹோவை பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


முதல் நாள் வசூலில் பாகுபலி 2 படத்தை முந்த முடியவில்லை என்றாலும் அவெஞ்சர்ஸ் என்ட்கேம்(58 கோடி), தக்ஸ் ஆப் இந்தோஸ்தானின் (52 கோடி) வசூலை முறியடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X