Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லாக்டவுனில் பிரபல சினிமா இயக்குனர் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. திரையுலகினர் வாழ்த்து!
சென்னை: பிரபல இளம் திரைப்பட இயக்குனர் திருமணம் மிகவும் எளிமையாக நேற்றிரவு நடந்தது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக பல நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்கள் திருமணங்களை தள்ளி வைத்தனர்.
த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..!
நடிகர் ராணா
ஆனாலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், பிரமாண்டமாக இல்லாமல் எளிமையாகத் தங்கள் திருமணங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் நிதின் திருமணம் எளிமையாக நடந்தது. சில மலையாள நடிகர்களும் தங்கள் திருமணங்களை எளிமையாக நடத்தினர். அடுத்து நடிகர் ராணாவின் திருமணம் வரும் 8 ஆம் தேதி ஐதரபாத்தில் நடக்க இருக்கிறது.
சாஹோ இயக்குனர் சுஜீத்
மாமாங்கம் படத்தில் நடித்த பிராச்சி தெஹ்லான் திருமணம் வரும் 7 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதற்கிடையே பிரபல சினிமா இயக்குனர் சுஜீத் திருமணம் நேற்றிரவு நடந்துள்ளது. சர்வானந்த், சிரத் கபூர், அதிவிசேத், சம்பத், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ரன் ராஜா ரன். இதை இயக்கியவர் சுஜித். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது.
ஆக்ஷன் அதிரடி
இதே நிறுவனத்துக்காக பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கிய படம், சாஹோ. பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த ஆக்ஷன் அதிரடி படத்தில், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து சிரஞ்சிவி நடிக்கும், மலையாளத்தில் வெளியான லூசிபர் பட ரீமேக்கை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
எளிமையாக திருமணம்
இயக்குனர் சுஜித், பிரவள்ளிகா என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். பிரவள்ளிகா, பல் மருத்துவர். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் ஐதராபாத்தில் எளிமையாக நடந்தது.
திரையுலக பிரபலங்கள்
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு நடந்துள்ளது. இதில் இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தனது திருமணம் பற்றி இயக்குனர் சுஜித், எந்த தகவலையும் சமூக வலைதளப் பக்கத்தில் அப்டேட் செய்யாமல் இருந்தார். ஆனால், அவர் நண்பர்களான இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!