twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனில் பிரபல சினிமா இயக்குனர் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார்.. திரையுலகினர் வாழ்த்து!

    By
    |

    சென்னை: பிரபல இளம் திரைப்பட இயக்குனர் திருமணம் மிகவும் எளிமையாக நேற்றிரவு நடந்தது.

    கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதன் காரணமாக பல நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் தங்கள் திருமணங்களை தள்ளி வைத்தனர்.

    த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..! த்ரில்லர் பட நாயகி.. வைரலாகும் ராம் கோபால் வர்மா ஹீரோயின் வெளியிட்ட அப்படி இப்படி போட்டோ..!

    நடிகர் ராணா

    நடிகர் ராணா

    ஆனாலும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், பிரமாண்டமாக இல்லாமல் எளிமையாகத் தங்கள் திருமணங்களை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் நிதின் திருமணம் எளிமையாக நடந்தது. சில மலையாள நடிகர்களும் தங்கள் திருமணங்களை எளிமையாக நடத்தினர். அடுத்து நடிகர் ராணாவின் திருமணம் வரும் 8 ஆம் தேதி ஐதரபாத்தில் நடக்க இருக்கிறது.

    சாஹோ இயக்குனர் சுஜீத்

    சாஹோ இயக்குனர் சுஜீத்

    மாமாங்கம் படத்தில் நடித்த பிராச்சி தெஹ்லான் திருமணம் வரும் 7 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதற்கிடையே பிரபல சினிமா இயக்குனர் சுஜீத் திருமணம் நேற்றிரவு நடந்துள்ளது. சர்வானந்த், சிரத் கபூர், அதிவிசேத், சம்பத், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ரன் ராஜா ரன். இதை இயக்கியவர் சுஜித். ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது.

    ஆக்‌ஷன் அதிரடி

    ஆக்‌ஷன் அதிரடி

    இதே நிறுவனத்துக்காக பிரபாஸ் நடிப்பில் சுஜித் இயக்கிய படம், சாஹோ. பான் இந்தியா படமாக, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவானது. மெகா பட்ஜெட்டில் உருவான இந்த ஆக்‌ஷன் அதிரடி படத்தில், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து சிரஞ்சிவி நடிக்கும், மலையாளத்தில் வெளியான லூசிபர் பட ரீமேக்கை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

    எளிமையாக திருமணம்

    எளிமையாக திருமணம்

    இயக்குனர் சுஜித், பிரவள்ளிகா என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். பிரவள்ளிகா, பல் மருத்துவர். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் ஐதராபாத்தில் எளிமையாக நடந்தது.

    திரையுலக பிரபலங்கள்

    திரையுலக பிரபலங்கள்

    இந்நிலையில், இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்றிரவு நடந்துள்ளது. இதில் இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தனது திருமணம் பற்றி இயக்குனர் சுஜித், எந்த தகவலையும் சமூக வலைதளப் பக்கத்தில் அப்டேட் செய்யாமல் இருந்தார். ஆனால், அவர் நண்பர்களான இசை அமைப்பாளர் ஜிப்ரான் உட்பட பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    English summary
    Prabhas 'Sahoo' director Sujeeth tied the knot with his fiancee Pravallika on Sunday night in the presence of family and friends.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X