விமர்சனம் ஒரு பக்கம், தமிழ் ராக்கர்ஸ் ஒரு பக்கம்: அடி மேல் அடி வாங்கும் சாஹோ
Recommended Video
சென்னை: சாஹோ படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
எந்த மொழி படம் வெளியானாலும் அதை உடனுக்குடன் ஆன்லைனில் கசியவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ். அந்த தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை இதுவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை.

பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரபாஸின் சாஹோ படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. படம் வெளியான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ். அதுவும் நல்ல ப்ரிண்ட்டில் கசிந்துள்ளதால் அதை பலரும் டவுன்லோடு செய்துள்ளனர்.
இப்படி படம் ரிலீஸான கையோடு கசிந்துள்ளதால் சாஹோவின் வசூல் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. தமிழ் ராக்கர்ஸ் ஆட்களை பிடித்து சிறையில் அடைக்காமல் விட மாட்டேன் என்று சபதம் போட்டவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
சாஹோ படம் பிரபாஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால் படத்தை பார்த்த விமர்சகர்கள் வேறு மாதிரி தெரிவித்துள்ளனர். சாஹோ படத்தில் ஆக்ஷனுக்கு குறைவே இல்லை. ஆனால் பிரபாஸின் திறமையை வீணடித்துவிட்டார்கள். பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் இடையே கெமிஸ்ட்ரி இல்லை. பாகுபலி பிரபாஸை எதிர்பார்த்து செல்ல வேண்டாம். அவர் ரொம்ப மெதுவாக வசனம் பேசியுள்ளார்.
படத்தில் ஏகப்பட்ட டுவிஸ்ட்டுகள் உள்ளன. அதனாலேயே படம் பார்ப்பவர்களுக்கு கண்ணை கட்டுகிறது. நல்ல கதை தான் ஆனால் அதை திரையில் கொண்டு வந்த விதத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பிரபல விமர்சகர் சாஹோ படத்தை பார்க்க சகிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விமர்சனங்களை எல்லாம் பார்த்து பிரபாஸ் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாஹோ படத்திற்கு இப்படி விமர்சனம் வந்துள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வேறு அதை கசியவிட்டு வசூலில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











