அஜித்துக்கு பிறகு பிரபாஸ் சொன்னதால் தான் அதற்கு ஓகே சொன்னேன்.. சாஹோ பற்றி அருண் விஜய்

சாஹோ படத்தின் லுக்கை வைத்துக் கொண்டே 'செக்கச்சிவந்த வானம்' மற்றும் 'தடம்' படங்களில் நடித்த நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.

சென்னை: சாஹோ படத்தில் முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளதாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் மிக அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம் சாஹோ. இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

Saaho: Im unable change my look for CCV and Thadam, says Arun Vijay

இதையொட்டி சென்னையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், சாஹோ படத்தின் கெட்டப்பிலேயே செக்கச் சிவந்த வானம் மற்றும் தடம் ஆகிய படங்களில் நடித்ததாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். பெருமைப்படக் கூடிய படைப்பில் நானும் இருக்கிறேன். சுஜித் சார் என்னிடம் கதை சொல்லும் போதே 'இந்தக் கேரக்டர் நீங்க பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும் என்று பிரபாஸ் அண்ணா சொன்னார்' எனக் கூறினார். அப்போதே இந்தப் படத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என முடிவு பண்ணினேன்.

'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், சரியான வாய்ப்புக்காக காத்திருந்தேன். முதல் முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன். சுஜித் சார் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். ஆனால், நிறைய நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக்கூடிய விதம் சிறப்பாக இருக்கும். அதற்கு நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததிற்கு நன்றி. இரண்டு வருடங்கள் கழித்து வரக்கூடிய படம் என்பதால் எப்படியிருக்க வேண்டும் என்பதில் பிரபாஸ் ரொம்ப தெளிவாக இருந்தார். பாகுபலிக்கு பிறகு நிறைய பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம். அடுத்தக் கட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப எளிமையான மனிதர்.

இந்தப் படத்தின் லுக்கை வைத்துக் கொண்டே 'செக்கச்சிவந்த வானம்' மற்றும் 'தடம்' படங்களில் நடித்தேன். ஏனென்றால் இதில் ஒப்பந்தமாகிவிட்டதால் என்னால் லுக்கை மாற்ற இயலவில்லை. அனைவருமே பெருமைப்படக் கூடிய படமாக இருக்கும்", என அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X