ஆமிர்கானின் தாங்கல் சாதனையை முறியடித்த சாஹோ.. பிரபாசுக்கு பெருகும் ஆதரவு !

ஹைதராபாத் : இந்திய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் மிகப்பெரிய வசூலை ஈட்டி சாதனை படைத்துக் கொண்டு வருகிறது.

Recommended Video

Prabhas Exclusive Interview | Saaho Special

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தங்கல், பாகுபலி2, 2.0, சாஹோ என பல இந்திய திரைப்படங்கள் வெளிநாட்டிலும் சக்கைபோடு போட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜப்பானிலும் இந்தியப் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வரும் நிலையில் ஆமிர் கான் நடிப்பில் வெளியாகின தங்கல் திரைப்படம் ஜப்பானின் மிகப்பெரிய வசூலை ஈட்டியது, அதை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான சாஹோ படம் தங்கல் படத்தின் வசூல் சாதனையை தற்போது முறியடித்துள்ளது.

பல்வேறு சாதனைகளை

பல்வேறு சாதனைகளை

நடிகர் ஆமிர் கான் நடிப்பில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசூலை வாரி குவித்து பல திரை ஜாம்பவான்களையும் வாய் பிளக்க வைத்த திரைப்படம் தங்கல். மல்யுத்த போட்டிகளை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் இந்தியாவில் பல்வேறு சாதனைகளை செய்து இன்று வரை அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.

தனி வரவேற்பு உண்டு

தனி வரவேற்பு உண்டு

இந்தியாவில் தற்போது பல்வேறு மொழி திரைப்படங்களும் வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் நிலையில், இவை அனைத்தும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு வெளி நாட்டு மக்களையும் ரசிக்க வைத்து வருகிறது. அந்த வகையில் ஜப்பான் ரசிகர்களிடம் இந்தியப் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு உண்டு.

தங்கல் வசூலில் நம்பர் ஒன்

தங்கல் வசூலில் நம்பர் ஒன்

ரஜினியின் முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி இன்றுவரை பல்வேறு வசூல் சாதனைகளை புரிந்து வரும் நிலையில், தற்போது பல புதிய இந்திய திரைப்படங்களும் ஜப்பானில் வெளியாகி பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஆமிர் கானின் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான தங்கல் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு வசூல் சாதனைகளையும் அடித்து துவம்சம் செய்துவிட்டு வசூலில் நம்பர் ஒன் திரைப்படமாக இருந்துவருகிறது.

பல ரெக்கார்ட்களை மிரட்டி

பல ரெக்கார்ட்களை மிரட்டி

பெண்களும் மல்யுத்த போட்டிகளில் சாதிக்கலாம் என்ற புதிய கோணத்தில் உருவான தங்கல் திரைப்படம் சுமார் 70 கோடியில் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப் படம் உலக அளவில் கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேல் வசூல் செய்து உலக அளவில் பல பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட்களை மிரட்டி வருகிறது.

சாஹோ திரைப்படம் வசூலித்து

சாஹோ திரைப்படம் வசூலித்து

இந்நிலையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் ஜப்பானில் வெளியாகியிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக மீண்டும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவித்து தற்பொழுது ஜப்பானில் தங்கல் படம் வசூலித்த வசூலை விட பல மடங்கு சாஹோ திரைப்படம் வசூலித்து, அதிக வசூல் செய்த ஐந்து இந்திய திரைப்படங்களின் வரிசையில் சாஹோவும் தற்போது இணைந்துள்ளது.

பாகுபலி திரைப்படத்திற்கு பின்

பாகுபலி திரைப்படத்திற்கு பின்

பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபாஸிற்கு எப்படி இந்தியாவில் பல்வேறு மொழி ரசிகர்களும் இருந்து வருகின்றனரோ அதேபோன்று ஜப்பானிலும் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரபாஸ்-க்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

பாகுபலி படத்தை தொடர்ந்து தற்போது சாஹோ வெளியாகி சாதனை படைத்து வரும் நிலையில் பிரபாஸின் அடுத்த படமான ராதே ஷ்யாம் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி ஜப்பானிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X