Saaho கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்: புது விளக்கம் சொல்லும் நெட்டிசன்ஸ்

By Siva

சென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதற்கு நெட்டிசன்கள் புது விளக்கம் அளித்துள்ளனர்.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் கடந்த 30ம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர்.

இந்நிலையில் சாஹோ மற்றும் பிரபாஸை கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டுள்ளனர்.

பாகுபலி

சாஹோ படத்தில் நடிப்பதை தடுக்கவே கட்டப்பா பாகுபலியை கொலை செய்தார் என்று ஒருவர் தெரிவித்தார். அதை பார்த்த மற்றொருவரோ ஆனால் அவரால் மகேந்திர பாகுபலியை சாஹோ படத்தில் நடிப்பதில் இருந்து தடுக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சாஹோ

சாஹோ படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அந்த காசு எல்லாம் கரியாகிவிட்டதாக கலாய்த்துள்ளனர். படம் மொக்கை என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளபோதிலும் சாஹோவை பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளருக்கு போட்ட காசுக்கு மேலேயே கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

படம்

சாஹோ படத்தை பற்றி அநியாயத்திற்கு கலாய்க்கிறார்கள். யார் கலாய்த்தாலும் படம் சூப்பர், சான்ஸே இல்லை, மரண மாஸ் என்கிறார்கள் பிரபாஸ் ரசிகர்கள். படம் நன்றாக இல்லை என்றால் மக்கள் ஏன் அதை பார்த்து ஹிட்டாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களின் கேள்வியும் நியாயம் தான்.

கதறல்

அடங்கப்பா, 500 ரூபாய் ஜாஸ்தியாக கூட வாங்கிக்கோங்க, தயவு செய்து படத்தை நிறுத்துங்க என்று தியேட்டரில் இருப்பவர்கள் கதறுவது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர். இந்த மீம்ஸுகளை எல்லாம் பார்த்து பிரபாஸ் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X