சாஹோ விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் - ரசிகர்களுக்கு 23ஆம் தேதி சர்ப்ரைஸ் தரும் பிரபாஸ்

சென்னை: சாஹோ படம் பாசிட்டிவ் எனர்ஜியை தரும் படம் இது ரசிகர்களுக்கு விசுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்று பிரபாஸ் கூறியுள்ளார். 23ஆம் தேதி தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தரப்போகிறாராம் பிரபாஸ். ஆகஸ்ட் 30ஆம் தேதி சாஹோ ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னோட்டமாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

பாகுபலி நாயகன் பிரபாஸின் நடிப்பில் சுமார் 350 கோடி ரூபாய் செலவில் யுவி கிரியேஷன் மற்றும் டி சீரிஸ் தயாரித்துள்ள படம் சாஹோ. நாயகியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இப்படத்தில் முதன் முறையாக நாயகி ஸ்ரத்தா கபூர் தென்னிந்திய மொழிகளில் கால் பதிக்கிறார். அதே சமயத்தில் நாயகன் பிரபாஸ் இந்தப் படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதிக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெயிலர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரிக்க படத்தின் இயக்குநர், ஹீரோ பிரபாஸ் , ஹீரோயின் ஷ்ரத்தா கபூர் சென்னைக்கு வந்து செய்தியாளர்களை சந்தித்து சாஹோ பற்றிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

பாகுபலி போல வெற்றி பெறும்

பாகுபலி போல வெற்றி பெறும்

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசும்பொழுது, பாகுபலி பத்திரிக்கையாளர் சந்திப்பு இதே இடத்தில் தான் நடந்தது. அந்தப் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. அதேபோல் சாஹோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பும் இங்கு நடைபெறுகிறது. இதுவும் பிரமாண்ட வெற்றி பெரும் என்று நம்புவதாக கூறினார். சிறியவராக தோற்றம் அளிக்கும் இயக்குநரை நம்பி இத்தனை கோடி பட்ஜெட் கொடுத்திருக்கின்றனர். நம்பிக்கைதான். தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார் என்றார்.

பாகுபலி வேறு சாஹோ வேறு

பாகுபலி வேறு சாஹோ வேறு

சென்னையில் சிறுவயது முதல் படித்து வளர்ந்த இயக்குநர் சுஜித் அழகாய் தமிழ் பேசுகிறார். இந்தப்படத்தின் இயக்குநர் சுஜித் பேசும்பொழுது, தயாரிப்பாளர்கள் என் அண்ணன் மாதிரி. என்கிட்ட நம்பி பொறுப்பை ஒப்படைச்சாங்க. இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே அதன் தொழில்நுட்பக் கலைஞர்கள் தான் என்று தெரிவித்தார். அதேபோல் இந்தப் படத்தை பாகுபலியுடன் கம்பேர் பண்ணவேண்டாம் என்று கூறினார்.

சாஹோ பாசிட்டிவ்

சாஹோ பாசிட்டிவ்

நாயகன் பிரபாஸிடம், சாஹோ என்பதன் அர்த்தம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஜெய்ஹோ மாதிரி சாஹோவும் ஒரு பாஸிட்டிவான வார்த்தைதான், மற்றபடி அதற்கு வேறு அர்த்தம் ஒன்றும் கிடையாது என்று தெரிவித்தார். அதேபோல், பாகுபலிக்கு அப்புறம் இந்த படத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறோம் என்றார். பாகுபலி ஆடியன்ஸ் வேறு அந்த படத்துடன் இதை கம்பேர் பண்ணவேண்டாம், பாகுபலி ஒரு ஹிஸ்டாரிகல் சப்ஜெக்ட். இது ஒரு பொழுது போக்கு அம்சமுள்ள படம் என்று குறிப்பிட்டார்.

நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன்

நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன்

சாஹோ படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் உலகத் தரத்தில் இருக்கும் என்று பிரபாஸ் தெரிவித்தார். சண்டைக் காட்சிகளுக்காக சீனாவிலிருந்து சண்டைக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அபுதாபி, இத்தாலி, குரேஷியா, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மிகவும் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று பிரபாஸ் கூறினார். நேரடி தமிழ் படத்தில் நடிப்பது குறித்து கேட்டதற்கு, நானும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தேன், அதனால் விரைவில் நேரடி தமிழ் படத்தில் நடிப்பேன் என்று பிரபாஸ் கூறினார்.

ஷ்ரத்தா கபூர் மகிழ்ச்சி

ஷ்ரத்தா கபூர் மகிழ்ச்சி

நாயகி ஸ்ரத்தா கபூர் பேசும்போது, என்னை இந்தப் படத்தில் நடிக்க தேர்வு செய்ததற்கு நன்றி. எத்தனையோ திறைமையான நடிகைகள் உள்ளபோது என்னை தேர்வு செய்தது எனக்கு மகிழ்ச்சி. அதிலும் மூன்று மொழிகளில் தயாராகும் படத்திற்கு என்னை தேர்வு செய்தது நான் செய்த பாக்கியம். படத்தில் துப்பாக்கியை தூக்கி சுடுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்

இசையமைப்பாளர் ஜிப்ரான்

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, ஹாலிவுட் படங்களான ஃபாஸ்ட் அண்ட் ஃபயூரியஸ், மிஷன் இம்பாசிபிள் போன்ற படங்களில் பின்னணி இசை நம்மை எந்த அளவுக்கு ஈர்த்ததோ, அதே போல் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளேன். படம் பார்க்கும் உங்களுக்கும் பிடிக்கும். அதேபோல் க்ளைமாக்ஸ் காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பின்னணி இசை அனைவரையும் கவரும் என நினைக்கிறேன் என்றார்.

பிரம்மாண்ட படைப்பு

பிரம்மாண்ட படைப்பு

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய் பேசும்போது, ஒரு பிரமாண்டமான படைப்பில், அதுவும் முதன் முதலாக மூன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நான் இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். இந்த படத்திற்காக முதல் முறையாக இந்தி பேசியுள்ளேன் என்றும் கூறினார். என்னையறிந்தால் படத்திற்குப் பிறகு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். அது இந்த புராஜெக்ட் மூலம் கிடைத்துள்ளது என்றார். இரண்டரை வருடம் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறோம் என்றும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X