ஹாலிவுட்டை அடுத்து பாலிவுட்டில் இருந்து காப்பியா?: சாஹோவை விளாசும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

சாகோ படத்தின் ரகசியத்தை சொன்ன பிரபாஸ் I Saaho Press Meet

சென்னை: சாஹோ பட போஸ்டரை பார்த்தவர்கள் இதை கூடவா காப்பியடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகுபலி 2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபாஸும், ஹீரோயின் ஷ்ரத்தா கபூரும் கலந்து கொண்டு வருகின்றனர்.

Saaho poster reminds fans of Ranbir- Ash

இந்த படத்தின் போஸ்டர்கள் ஹாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வெளியான புதிய போஸ்டரில் ஷ்ரத்தா பிரபாஸ் மடியில் அமர்ந்து அவரை கட்டிப்பிடித்திருந்தார். அடடா, இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி செம என்று ரசிகர்கள் பாராட்டினார்கள்.

அப்பொழுது தான் அவர்களுக்கு இதே போன்ற புகைப்படத்தை எங்கோ பார்த்தது போன்று இருந்தது. ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்தபோது பாலிவுட் பிரபலங்களான ரன்பிர் கபூரும், ஐஸ்வர்யா ராயும் பிரபல பத்திரிக்கைக்கு அளித்த அதே போஸ் தான் தற்போது சாஹோ போஸ்டராக வெளியாகியுள்ளது.

முதலில் ஹாலிவுட்டில் இருந்து காப்பியடித்தது போதாது என்று தற்போது பாலிவுட்டில் இருந்தா, இது பிரபாஸுக்கு தான் அசிங்கம், காப்பியடிப்பதை அவர் ஏன் கண்டிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சாஹோ படம் பாகுபலி 2 படத்தின் வசூலை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், நீல் நிதின் முகேஷ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது.

சாஹோ படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு நீங்க பார்த்தீங்களா, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றார்.

சாஹோ படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 320 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியானது. சாஹோ படத்தின் பட்ஜெட்டே ரூ. 350 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, தயாரிப்பாளர் போட்ட காசு கிட்டத்தட்ட வந்துவிட்டது.

இதற்கிடையே சாஹோ படத்தில் நடித்தபோது பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் இடையே காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரபாஸின் பெயர் சக நடிகையுடன் சேர்ந்து அடிபடுவது இது முதல் முறை அல்ல என்பதால் ரசிகர்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X